TCS வேவைாய்ப்பு.. சென்னையில் செப்டம்பர் 14ம் தேதி இண்டர்வியூ.. யாரெல்லாம் பங்கேற்கலாம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் காலி இடங்களை நிரப்புவதற்கான இண்டர்வியூ என்பது செப்டம்பர் 14ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இந்த இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.

பிரபல ஐடி நிறுவனங்களில் ஒன்றான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS or Tata Consultancy Services) எனும் டிசிஎஸ் சென்னையில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

it jobs jobs job

தற்போதைய அறிவிப்பின்படி டிசிஎஸ் நிறுவனத்தில் Service Desk L1 பணிக்கு ஆட்கள் ரே்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு ஆங்கிலத்தில் நன்றாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.

மேலும் கஸ்டமர் சர்வீஸ் மற்றும் இன்டர்பர்சனல் ஸ்கில்ஸ் (Interpersonal Skills) இருக்க வேண்டும். பிரிட்டனை சேர்ந்த கிளையன்ட்ஸ் உடன் பேச வேண்டி இருக்க வேண்டும். விண்ணப்பம் செய்வோர் ஷிப்ட் அடிப்படையில் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும். இரவு ஷிப்ட் என்றாலும் ரெடியாக இருக்க வேண்டும்.

ஐடிஐஎல் சான்று கட்டாயம் வைத்திருக்க வேண்டும். இதுதவிர சிஸ்டம் பற்றிய அடிப்படை அறிவு, பேக்அப், நெட்வொர்க் உள்ளிட்டவை பற்றி தெரிந்திருக்க வேண்டும். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் குறிப்பிட்ட துறையில் 2 முதல் 5 ஆண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

பணிக்கான இண்டர்வியூ என்பது செப்டம்பர் 14ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது. இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் நேரடியாக TCSL "Chennai One" - Gate 1, Tower 3 Floor 3 Ignite floor Sez Unit, (IGGGL-SEZ) 200 Ft, Thoraipakkam - Pallavaram Ring Road, Thoraipakkam, Chennai 600096 என்ற முகவரிக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர். இண்டர்வியூவின்போது தேவையான அனைத்து ஆவணங்களையும் எடுத்து செல்ல வேண்டும். இண்டர்வியூ காலை 10 மணி என்பதால் முன்கூட்டியே சரியான திட்டத்துடன் செல்வதன் மூலம் கடைசி கட்ட பரபரப்பை தவிர்க்கலாம்.

இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு வழங்கப்படும் மாதம் அல்லது ஆண்டு சம்பளம் என்பது பற்றி தற்போது எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. தகுதி மற்றும் அனுபவம் அடிப்படையில் சம்பளம் நிர்ணயம் செய்யப்பட உள்ளது. விருப்பம் உள்ளவர்கள் முன்கூட்டியே கீழே உள்ள லிங்க் மூலம் பதிவு செய்து கொள்வது நல்லது.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+