TCS வேலைவாய்ப்பு.. அக்டோபர் 10ம் தேதி ஆன்லைனில் இண்டர்வியூ.. பங்கேற்பது எப்படி தெரியுமா?
சென்னை: பிரபல ஐடி நிறுவனமான டிசிஎஸ்சில் சாப்ட்வேர் இன்ஜினியர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளது. இந்த பணிக்கான இண்டர்வியூ என்பது அக்டோபர் 10ம் தேதி நடைபெற உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இதில் பங்கேற்கு பயன்பெறலாம். தேர்வாகும் நபர்கள் சென்னை உள்பட இந்தியா முழுவதும் உள்ள டிசிஎஸ் நிறுவனத்தில் பணியமர்த்தப்பட உள்ளனர்.
TCS எனும் Tata Consultancy Services ஐடி நிறுவனத்தில் இருந்து அடுத்தடுத்து வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.

அந்த வகையில் தற்போது டிசிஎஸ் நிறுவனத்தில் இருந்து PAN India அளவில் புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
தற்போதைய அறிவிப்பின்படி டிசிஎஸ் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் பெகா டெவலப்பர், பெகா சிஎஸ்எஸ்ஏ சர்ட்டிபிகேட், பிபிஎம் கான்செப்ட்ஸ் மற்றும் மெத்தடலாஜிஸ் தெரிந்திருக்க வேண்டும்.
அதோடு REST services பற்றி தெரிந்து வைத்திருக்க வேண்டும். மேலும் குறிப்பிட்ட பிரிவில் 6 முதல் 8 ஆண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் இந்தியா முழுவதும் பணியமர்த்தப்பட உள்ளனர். அதன்படி அதிர்ஷ்டம் இருப்பின் சென்னை நிறுவனத்திலும் பணியாற்ற வாய்ப்பு கிடைக்கும்.
மேலும் தற்போது வெளியாகி உள்ள அறிவிப்பின்படி சாப்ட்வேர் இன்ஜினியர் பணிக்கு வழங்கப்படும் சம்பளம் பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. பணி அனுபவம் பற்றி அனுபவம் அடிப்படையில் சம்பளம் வழங்கப்படலாம். சம்பளம் பற்றி இறுதிக்கட்ட இண்டர்வியூவின்போது தெரிவிக்கப்படும்.
இந்த பணிக்கான இண்டர்வியூ என்பது அக்டோபர் 10ம் தேதி நடைபெற உள்ளது. இண்டர்வியூ என்பது Virtual/Online முறையில் நடைபெறும். பணியை விரும்புவோர் இண்டர்வியூவின்போது அரசு அடையாள அட்டையை கையில் வைத்திருக்க வேண்டும். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் டிசிஎஸ் லிங்க்ட்இன் ரிஜிஸ்டர் செய்து கொள்ள வேண்டும். ரிஜிஸ்டர் செய்வதற்கான கடைசி தேதி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் உடனடியாக பதிவு செய்வது நல்லது.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
IT JOBS: நாளை மதியம் சென்னையில் இண்டர்வியூ.. HCL-லில் குவிந்திருக்கும் வேலைவாய்ப்பு.. செம சான்ஸ் -
IT JOBS: மார்ச் 14ல் பெங்களூரில் இண்டர்வியூ.. பணி சென்னையில் தான்.. HCL தரும் சூப்பர் சான்ஸ் -
இந்திய கடற்படையில் வேலைவாய்ப்பு.. 67 ஆயிரம் வரை சம்பளம்! 10, 12 ஆம் வகுப்பு தகுதி தான் -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து?












Click it and Unblock the Notifications