சென்னையில் காத்திருக்கும் ஐடி வேலை.. வெளியான புதிய அறிவிப்பு.. அழைக்கும் TCS
சென்னை: முன்னணி ஐடி நிறுவனமான டிசிஎஸ்சில் சாப்ட்வேர் இன்ஜினியர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தேர்வாகும் நபர்கள் சென்னையில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வதற்கான தகுதிகள் பற்றி இங்கே பார்க்கலாம்.
TCS எனும் Tata Consultancy Services ஐடி நிறுவனத்தில் இருந்து அடுத்தடுத்து வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது சென்னையில் இயங்கி வரும் டிசிஎஸ் நிறுவனத்தில் இருந்து புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

சென்னை டிசிஎஸ் நிறுவனத்தில் தற்போது MDM AirWatch/intune பிரிவில் சாப்ட்வேர் இன்ஜினியர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு குறைந்தபட்சம் 6 ஆண்டு முதல் 8 ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
அதுமட்டுமின்றி விண்ணப்பம் செய்வோருக்கு Microsoft Intune (MDM) Administration/Airwatch Administration தெரிந்திருக்க வேண்டும். எண்ட்பாயிண்ட் மேனேஜர் அட்மினிஸ்ட்ரேஷன் லைசென்ஸ் மேனேஜ்மென்ட் தெரிந்திருக்க வேண்டும். யூசர் மற்றும் குரூப்ஸ் மேனேஜ்மென்ட், செக்யூரிட்டி மற்றும் காம்ளையன்ஸ் (Compliance) மேனேஜ்மென்ட் தெரிந்திருக்க வேண்டும்.
மேலும் Establish Mechanism-க்கான டேட்டா பேக்அப்/ரீஸ்டோர், டாக்குமென்ட் பாலிசிஸ், ப்ராசஸ், ப்ரோசிஷர் மற்றும் இம்பிளிமென்ட் பெஸ்ட் பிராக்டீஸஸ், PowerShell and Unix Shells உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் 24X7 என்ற அளவில் கால் ரொட்டேஷன் செய்வது, சர்வீஸ் நவ், ஐடிஐஎல் புராசஸ் உள்ளிட்டவற்றில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.
பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் உள்ள டிசிஎஸ் நிறுவனத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர். பணிக்கான மாத சம்பளம் பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. பணி அனுபவத்தின் அடிப்படையில் சம்பளம் என்பது வழங்கப்படலாம்.
இந்த பணிக்கான அறிவிப்பு என்பது நேற்று முன்தினம் வெளியாகி உள்ளது. கடைசி தேதி எதுவும் குறிப்பிடப்படவில்லை. இதனால் எப்போது வேண்டுமானாலும் விண்ணப்ப தேதி நிறைவு பெறலாம். இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்யலாம்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications