TCS வேலைவாய்ப்பு.. சென்னை உள்பட 4 இடங்களில் பணி நியமனம்.. நாளை மறுநாள் ஆன்லைனில் இண்டர்வியூ

Subscribe to Oneindia Tamil

சென்னை: டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி நாளை மறுநாள் (ஏப்ரல் 18) ஆன்லைனில் இண்டர்வியூ நடைபெற உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை, பெங்களூர், புனே, இந்தூர் உள்ளிட்ட இடங்களில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர்.

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் எனும் டிசிஎஸ் ஐடி நிறுவனம் நம் நாட்டில் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் சார்பில் அடுத்தடுத்து புதிய வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வருகின்றன. அந்த வகையில் தற்போதைய அறிவிப்பின் முழுவிபரம் வருமாறு:

it jobs jobs job

டிசிஎஸ் நிறுவனத்தில் தற்போது விண்டோஸ் டாட் நெட் (Windows Dot Net) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணியை விரும்புவோர் ASP.NET MVC அல்லது Windows .NET ஆகியற்றில் குறைந்தபட்சம் 2 ஆண்டு முதல் 4 ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

மேலும் ASP.NET (Web)/C#-யில் 4 முதல் 6 ஆண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். .NET Framework-ல் நல்ல அறிவு பெற்றிருக்க வேண்டும். JQuery பணி அனுபவம் இருக்க வேண்டும். NET 3.5 to 4.8 (List Versions used), MVC framework/ASP.NET Razor, N-tier அப்ளிகேஷன்ஸ், டஸ்ட்ரிபுட்டர் சர்வர்ஸ், என்டிடி பிரேம்வொர்க்ஸ் உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும்.

T-SQL புரோகிராமிங், PL - SQL புரோகிராமிங், JSON அல்லது API calls, XML parsing, BitBucket (DevOPS Automation Source Control), ADO.NET, Entity Framework, LINQ உள்ளிட்டவற்றில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். எஸ்க்யூஎல் சர்வர்ஸ் பற்றி நன்கு தெரிந்திருக்க வேண்டும்.

தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான மாதசம்பளம் பற்றிய விபரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. தகுதி மற்றும் பணி அனுபவம் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் சம்பளம் என்பது வழங்கப்பட உள்ளது. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் விண்ணப்பம் செய்யலாம்.

இந்த பணிக்கான இண்டர்வியூ என்பது ஏப்ரல் 18 (நாளை மறுநாள்) நடைபெற உள்ளது. இண்டர்வியூ என்பது Virtual Drive முறையில் இருக்கும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் 4 இடங்களில் நியமனம் செய்யப்பட உள்ளனர். அதன்படி சென்னை, பெங்களூர், புனே, இந்தூர் உள்ளிட்ட இடங்களில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர்.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+