TCS நிறுவனத்தில் சூப்பர் வேலை.. நாளை ஆன்லைனில் இண்டர்வியூ.. சென்னை உள்பட 2 இடங்களில் நியமனம்
சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்து டிசம்பர் 11ம் தேதி (நாளை) ஆன்லைனில் நடக்கும் இண்டர்வியூவில் பங்கேற்று பயன் பெறலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை உள்பட 2 இடங்களில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
டிசிஎஸ் நிறுவனத்தில் தற்போது Windows and VMware Admin பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் பிஇ, பிடெக், எம்சிஏ, எம்எஸ்சி, எம்எஸ் உள்ளிட்ட படிப்புகளை படித்து ஐடி துறையில் 3 ஆண்டு பணிஅனுபவம் கொண்டிருக்க வேண்டும். அதேபோல் கல்லூரி படிப்பை முழு நேரமாக தான் படித்திருக்க வேண்டும்.

டெக்னிக்கல் ஸ்கில்செட்டை பொறுத்தவரை கான்ஃபிேஷன்ஸ் இன்ஸ்டாலேஷன் மற்றும் விண்டோஸ் சர்வர்ஸ் ஆபரேஷன் மேனேஜஸ் தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் VMware Virtualization தெரிந்திருக்க வேண்டும். விண்டோஸ் சர்வர்ஸ், ஆர்2எடிசன்ஸ், VMware, கிளஸ்டர்ஸ், சர்வீஸ் பேட்சிங் உள்ளிட்டவற்றில் 4 ஆண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். Enterprise level data centres ஹேண்ட்லிங் தெரிந்திருக்க வேண்டும்.
இவை எல்லாவற்றக்கும் மேலாக சம்பந்தப்பட்டோர் குறைந்தபட்சம் 6 ஆண்டு முதல் 10 ஆண்டு வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும். இந்த பணிக்கான இண்டர்வியூ டிசம்பர் 11ம் தேதி (நாளை, வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. இண்டர்வியூ ஆன்லைனில் தான் நடக்கும். இதனால் தகுதியானவர்கள் முன்கூட்டியே விண்ணப்பம் செய்து இண்டர்வியூவில் பங்கேற்பதை உறுதி செய்ய வேண்டும். கடைசி ஒரு மாதத்தில் டிசிஎஸ் இண்டர்வியூவில் பங்கேற்றவர்களுக்கு இதில் அனுமதியில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications