TCS ஐடி நிறுவனத்தில் வேலை.. எம்பிஏ முடித்தவர்களுக்கும் வாய்ப்பு.. பிப்ரவரி 20ம் தேதி கடைசி நாள்
சென்னை: பிரபல ஐடி நிறுவனமான டிசிஎஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு எம்பிஏ முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
இந்தியாவில் இயங்கி வரும் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்று டிசிஎஸ். இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்கள் அவ்வப்போது முறையான அறிவிப்புகளுடன் நிரப்பப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் தற்போது புதிய அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது. அதன்படி டிசிஎஸ்ஸில் எம்பிஏ ஹியரிங் என்ற பெயரில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் எம்பிஏ (MBA), எம்எம்எஸ் (MMS), பிஜிடிபிஏ (PGDBA), பிஜிடிஎம் (PGDM) உள்ளிட்ட படிப்புகளில் மார்க்கெட்டிங், ஃபைனான்ஸ், ஆபரேஷன்ஸ், சப்ளை செயின் மேனேஜ்மென்ட், இன்பர்மேஷன் டெக்னாலஜி, ஜெனரல் மேனேஜ்மென்ட், பிசினஸ் அனலிடிக்ஸ், ப்ராஜெக்ட் மேனேஜ்மென்ட் ஆகிய படிப்புகளில் ஏதேனும் ஒன்றை படித்த 2025ம் ஆண்டு பேட்ஜை சேர்ந்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய பிப்ரவரி மாதம் 20ம் தேதி கடைசி நாளாகும். டிசிஎஸ் இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டும். TCS Next Step Portal-ல் சென்று முதலில் ரிஜிஸ்ட்டர் செய்ய வேண்டும். ஏற்கனவே ரிஜிஸ்டர் செய்திருந்தால் நேரடியாக IT Category என்பதை கிளிக் செய்து CT/DT ரெப்ரன்ஸ் நம்பரை பதிவிட்டு விண்ணப்பம் செய்யலாம். புதியவர்கள் என்றால் முதலில் TCS Next Step Portal-ல் முதலில் ரிஜிஸ்ட்டர் செய்து மேற்கூறிய முறையில் விண்ணப்பம் செய்ய வேண்டும்.
இவ்வாறு விண்ணப்பம் செய்யும்போது Select Your Mode of Test என்பதில் In Center என்பதை கிளிக் செய்து விரும்பும் தேர்வு மையத்தை செலக்ட் செய்யவும். முதலில் பதிவோருக்கு அருகே உள்ள தேர்வு மையம் கிடைக்க வாய்ப்புள்ளது. இதனால் விரும்புவோர் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது.
தேர்வு என்பது மார்ச் மாதம் 10ம் தேதி நடைபெற உள்ளது. தேர்வு என்பது 3 வகைகளில் நடக்கும். Verbal Ability, Numerical Ability, Business Aptitude என்பதன் அடிப்படையில் தேர்வு நடத்தப்படும்.இந்த பணி தொடர்பாக டிசிஎஸ் நிறுவனத்தில் இருந்து எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது. யாராவது வேலை தொடர்பாக போன் செய்து பணம் செலுத்த கேட்டால் கொடுக்க வேண்டாம் எனவும் பணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு தற்போதைய அறிவிப்பில் மாத சம்பளம் மற்றும் பணியமர்த்தப்படும் இடங்கள் பற்றிய விபரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. அதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருப்பின் [email protected] என்ற இ-மெயில் அல்லது ஹெல்ப்லைன் எண்ணான 18002093111 என்பதை தொடர்பு கொள்ளலாம்.
பணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications