TCS-ல் வேலை வேண்டுமா? மாதம் ரூ.50,000 முதல் ரூ.1.16 லட்சம் வரை சம்பளம்.. ரெடியா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரபல டிசிஎஸ் (TCS) நிறுவனத்தில் ஆண்டு சம்பளம் ரூ.6 லட்சம் முதல் ரூ.14 லட்சம் சம்பளத்தில் அசோசியேட் என்ஜினீர் - அப்ளிகேஷன் மேனேஜ்மென்ட் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்தியாவில் உள்ள முக்கிய ஐடி நிறுவனங்களில் ஒன்றாக டாடா கன்சல்டன்சி சர்வீஸ் (Tata Consultancy Services or TCS) நிறுவனம் உள்ளது. இந்தியா மட்டுமின்றி பல வெளிநாடுகளில் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

TCS Recruitment 2024 for Associate Engineer Application Management

இந்தியாவில் சென்னை, பெங்களூர், ஹைதராபாத் உள்பட பல்வேறு முக்கிய நகரங்களில் டிசிஎஸ் இயங்கி வரும் நிலையில் இங்கு காலியாக உள்ள பணியிடங்கள் முறையான அறிவிப்புகளோடு நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

டிசிஎஸ் நிறுவனத்தில் தற்போது அசோசியேட் என்ஜினீயர் (Associate Engineer) அப்ளிகேஷன் மேனேஜ்மென்ட் -கார்ப்பரேட் டெக்னாலஜி (Application Management - Corporate Technology) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். கம்ப்யூட்டர் சயின்ஸ், சாப்ட்வேர் என்ஜினீயர், அல்லது STEM டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.

மேலும் விண்ணப்பம் செய்வோருக்கு AEM architecture, installation, configuration, and troubleshooting-ல் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். வெப் டெக்னாலஜிஸ், ஜாபா, அபாச்சி (Apache), எச்டிடிபி, கேச்சிங் மெக்கானிசம் உள்ளிட்டவற்றை புரிந்து வைத்திருக்க வேண்டும். மேலும் ெஷல் (Shell), பைத்தான், பவர் ெஷல் உள்ளிட்டற்றில் கைதேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.

மானிட்டரிங் ட்யூல்ஸ்களான ஸ்ப்ளங் (Spulunk), டேட்டாடாக், நியூ ரெலிக் (New relic) அல்லது Prometheus மற்றும் லினக்ஸ் சர்வரில் அனுபவம் கொண்டிக்க வேண்டும். மேலும் ஆங்கிலத்தில் உரையாடும் திறன் கொண்டிருக்க வேண்டும்.

இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு குறைந்தபட்சம் ஆண்டுக்கு ரூ.6 லட்சம் சம்பளம் வழங்கப்படும். அதன்படி மாதம் ரூ.50 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும். அதிகபட்சம் என்றால் ஆண்டுக்கு ரூ.14 லட்சம் வரை (மாத சம்பளம் ரூ.1.16 லட்சம்)சம்பளம் வழங்கப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் தற்போதைய அறிவிப்பின்படி விண்ணப்பம் செய்வோர் பணிக்கு தேர்வாகும் பட்சத்தில் ஹைதராபாத்தில் பணியமர்த்தப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் tcs நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்ய ஜுலை மாதம் 31ம் தேதி கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணி அறிவிப்பு மற்றும் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+