TCS ஐடி வேலைவாய்ப்பு.. சென்னை - பெங்களூர் - ஹைதராபாத்தில் பணி நியமனம்!
சென்னை: டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் சென்னை, பெங்களூர், ஹைதராபாத்தில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளனர். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்யலாம்.
டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் இருந்து அடுத்தடுத்து புதிய வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. இந்த பணிக்கு குறைந்தபட்சம் டிகிரி முடித்திருக்க வேண்டும்.

அதன்படி ஐடி நிறுவனத்தில் Full Stack Developer React JS பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு என்னென்ன தகுதிகள் வேண்டும்? என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
அதேபோல், எச்டிஎம்எல், சிஎஸ்எஸ், ஜாவா ஸ்கிரிப்ட் உள்ளிட்ட ஃப்ரண்ட்எண்ட் டெக்னாலஜில் உள்ளிட்டவற்றில் நிபுணத்துவம் பெற்றிருக்க வேண்டும். React.js., Typescript உள்ளிட்ட ஃப்ரேம்வொர்க்ஸ் உள்ளிட்டவற்றை அறிந்து வைத்திருக்க வேண்டும். பேக்எண்ட் டெவலப்மெண்ட்டில் பைத்தான் அல்லது NodeJS உள்ளிட்டவற்றில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
அதேபோல், டேட்டாபேசஸ்களுக்கான PostgreSQL, MongoDB அல்லது அதுசார்ந்தவற்றில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். கண்ட்ரோல் சிஸ்டம்மஸ், Git, CI/CD பைப்லைன்ஸ், DevOPS பிராக்டீஸ் உள்ளிட்டவை பற்றி தெரிந்திருக்க வேண்டும். Scrum Process பற்றி புரிதல் தெரிந்திருக்க வேண்டும். Agile மற்றும் Scurm (JIRA) உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும்.
மேலும் பிரச்சனைகளை தீர்க்கும் திறன், மல்டிபிள் டாஸ்க், புராஜெக்ட்ஸ் உள்ளிட்டவற்றில் தெரிந்திருக்க வேண்டும். புதிய தொழில்நுட்பங்களை கற்று தெரிந்து கொள்ள வேண்டும். இந்த பணிக்கு குறைந்தபட்சம் 6 ஆண்டு முதல் 8 ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டிருந்தார். 6 ஆண்டுகளுக்கு குறைந்த பணி அனுபவம் இருப்பவர்கள் விண்ணப்பம் செய்ய வேண்டாம்.
தற்போதைய பணிக்கு மாதசம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. பணி அனுபவம் மற்றும் திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்பட உள்ளனர். இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். பெங்களூர், சென்னை, ஹைதராபாத் உள்ள இடங்களில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான இண்டர்வியூக்கான தேதி பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்யலாம். அதன்பிறகு ஷார்ட் லிஸ்ட் செய்யப்பட்டு இண்டர்வியூக்கு அழைக்கப்படுவார்கள். இண்டர்வியூவுக்கான தேதி, நேரம் அப்போது தெரிவிக்கப்படும்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here


Click it and Unblock the Notifications
