சென்னையில் ஐடி வேலை.. அழைக்கும் TCS நிறுவனம்.. டிசம்பர் 7ம் தேதி சோழிங்கநல்லூரில் இண்டர்வியூ
சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் டிசிஎஸ் நிறுவனத்தில் காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு டிசம்பர் 7 ம்தேதி சென்னை சோழிங்கநல்லூரில் காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை இண்டர்வியூ நடைபெற உள்ளது.
TCS or Tata Consultancy Services.. முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக டிசிஎஸ் உள்ளது. இந்த நிறுவனம் தலைநகர் சென்னையில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் இருந்து வெளியாகி உள்ள புதிய வேலைவாய்ப்பு பற்றிய முழு விபரம் வருமாறு:

தற்போதைய அறிவிப்பின்படி டிசிஎஸ் நிறுவனத்தில் இருந்து ஆட்டோமேஷன் டெஸ்ட்டிங் (Automation Testing) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் குறிப்பிட்ட பிரிவில் 4 முதல் 8 ஆண்டுகள் அனுபவம் கொண்டவராக இருக்க வேண்டும்.
அதோடு விண்ணப்பம் செய்வோர் ஆட்டோமேஷன் டெஸ்ட்டிங், செலினியம், ஜாவா உள்ளிட்டவற்றில் திறமை கொண்டவராக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பணிக்கான இண்டர்வியூ என்பது டிசம்பர் 7 ம் தேதி நடைபெற உள்ளது. இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், குமரன் நகர், 415/21 -24, டிஎன்எச்பி மெயின் ரோடு, சோழிங்கநல்லூர், சென்னை என்ற முகவரிக்கு செல்ல வேண்டும். அன்றைய தினம் காலை 9 மணி முதல் மதியம் 12 மணிக்குள் இண்டர்வியூ நடைபெற உள்ளது.
இண்டர்வியூவில் பங்கேற்க செல்வோர் Resume, அரசு வழங்கிய ஏதாவது ஒரு அடையாள அட்டை, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்று கையில் வைத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் டிஜிட்டல் முறையில் இருக்க வேண்டும். பணிக்கு விண்ணப்பம் செய்த EB Reference ID உடன் டிசிஎஸ் அப்ளிகேஷன் பார்ம் இருக்க வேண்டும்.
அதுமட்டுமின்றி 10 மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் சான்று, டிப்ளமோ/டிகிரி/பட்ட மேற்படிப்பு படித்து இருப்போர் அனைத்து செமஸ்டர்களுக்கான மார்க் ஷீட் , தற்போது பணியாற்றும் நிறுவனத்தின் பணி நியமன ஆணை, சமீபத்தில் பெற்ற Compensation கடிதம், கடைசி 4 மாத சம்பள பட்டியல், முந்தைய நிறுவனங்களில் பணியாற்றிய மற்றும் அதில் இருந்து வெளியேறிய (Relieving)கடிதம், இபிஎப்ஓ கார் மற்றும் சர்வீஸ் ஸ்டேட்மென்ட் உள்ளிட்டவை இருக்க வேண்டும்.
தற்போதைய அறிவிப்பின்படி மாதம் அல்லது ஆண்டு சம்பளம் என்பது பற்றி தற்போது எதுவும் தெரிவிக்கப்படவில்லை. கடைசி கட்ட இண்டர்வியூவில் அதுபற்றி தெரிவிக்கப்படலாம். தகுதி மற்றும் அனுபவம் அடிப்படையில் சம்பளம் நிர்ணயம் செய்யப்பட உள்ளது.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் டிசிஎஸ் நிறுவனத்தின் கீழே உள்ள டிசிஎஸ் லிங்க்ட்இன் பேஜ் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வழியாக ஆன்லைனில் விண்ணப்பம் செய்து இண்டர்வியூவில் பங்கேற்கலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
எஸ்பிஐ வங்கியில் வேலை.. டிகிரி முடித்தவர்களுக்கு செம சான்ஸ்.. 7,150 பணியிடங்கள்.. தேதி முடிய போகுது -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்!












Click it and Unblock the Notifications