சென்னையிலேயே ஐடி வேலை.. TCS தரும் சூப்பர் சான்ஸ்.. சோழிங்கநல்லூரில் மே 24ம் தேதி இண்டர்வியூ
சென்னை: முன்னணி ஐடி நிறுவனமான டிசிஎஸ் சார்பில் காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கான இண்டர்வியூ சென்னை சோழிங்கநல்லூரில் வரும் 24ம் தேதி நடைபெற உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையிலேயே நியமனம் செய்யப்பட உள்ளனர்.
டாடா குழுமத்தின் ஒரு பகுதியாக டிசிஎஸ் எனும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் ஐடி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் இருந்து தற்போது புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்த பணிக்கு யாரெல்லாம் விண்ணப்பம் செய்யலாம்? விண்ணப்பம் செய்வோருக்கு என்னென்ன தகுதிகள் வேண்டும்? என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் தற்போது சாப்ட்வேர் அசட் மேனேஜ்மென்ட் (Software Asset Management) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு சம்பந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் 4 ஆண்டு முதல் அதிகபட்சம் 10 ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
அதுமட்டுமின்றி Flexera Tool Implementation, மைக்ரோசாப்ட் மற்றும் ஆரக்கள் உள்ளிட்டவற்றுக்கான சாப்ட்வேர் லைசென்ஸ் ஹேண்டிலிங் தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் Service Now CMDB-யில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையிலேயே நியமனம் செய்யப்பட உள்ளனர்.
தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் குறித்த விபரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். இந்த பணிக்கான இண்டர்வியூ என்பது மே 24ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது. இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வழியாக விண்ணப்பம் செய்ய வேண்டும்.
அதன்பிறகு மே 24ம் தேதி சோழிங்கநல்லூரில் உள்ள டிசிஎஸ் அலுவலகத்தில் நடக்கும் இண்டர்வியூவில் பங்கேற்கலாம். சோழிங்கநல்லூரில் டிசிஎஸ் அலுவலகம் TCS Sholinganallur, Kumaran Nagar, 415/21-24, TNHB Main Road, Chennai, Tamil Nadu 600 119 என்ற முகவரியில் செயல்பட்டு வருகிறது. அங்கு வைத்து தான் இண்டர்வியூ நடைபெற உள்ளது.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications