சென்னை TCS-யில் வேலை.. பதிவு செய்ய நாளை கடைசி நாள்.. பிப்ரவரி 1ம் தேதி இண்டர்வியூ.. சூப்பர் சான்ஸ்
சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் இருந்து புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியை விரும்புவோர் ஜனவரி 31ம் தேதிக்குள் பதிவு செய்து கொண்டு பிப்ரவரி 1ம் தேதி சென்னையில் நடைபெறும் இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.
முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக டிசிஎஸ் செயல்பட்டு வருகிறது. டாடா குழுமத்தை சேர்ந்த இந்த டிசிஎஸ் நிறுவனம் தமிழகத்தில் சென்னையில் இயங்கி வருகிறது.

இந்நிலையில் தான் சென்னையில் உள்ள டிசிஎஸ் நிறுவனத்தில் பிப்ரவரி 1ம் தேதி (நாளை மறுநாள்) இண்டர்வியூ நடைபெற உள்ளது. இந்த இண்டர்வியூ குறித்த முக்கிய விபரங்கள் வருமாறு:
டிசிஎஸ் நிறுவனத்தில் இருந்து தற்போது PL/SQL Developer பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு சம்பந்தப்பட்ட பிரிவில் 2 ஆண்டு முதல் 5 ஆண்டு வரை அனுபவம் கொண்டவர்களாக இருக்க வேண்டும். Unix Scripting ஸ்கிப்ட்டிங், PL/SQL ஸ்கில்ஸ் இருக்க வேண்டும்.
அதேபோல் DDL/DML Statements/ueries, SQL Concepts உள்ளிட்டவற்றில் நல்ல அறிவை பெற்றிருக்க வேண்டும். நல்ல கம்யூனிகேஷன் திறமை இருக்க வேண்டும். அதேபோல் டேட்டா வார்ஹவுசிங் பற்றிய பண்டமென்டல்ஸ் மற்றும் கான்செப்ட் Autosys/JIRA உள்ளிட்டவை தெரிந்திருந்தால் அது பிளஸ் பாயிண்ட்டாகும்.
இந்த பணிக்கு அனுபவம் இல்லாதவர்கள் மற்றும் டிசிஎஸ்ஸின் முன்னாள் ஊழியர்கள் விண்ணப்பம் செய்ய வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பணிக்கான மாதசம்பளம் குறித்த விபரம் தெரிவிக்கப்படவில்லை. பணி அனுபவம் மற்றும் திறமையின் அடிப்படையில் சம்பளம் என்பது வழங்கப்பட வாய்ப்புள்ளது.
இந்த பணிக்கான இண்டர்வியூ என்பது பிப்ரவரி 1ம் தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. Tata Consultancy Services Ltd, 415/21 -24, Kumaran Nagar, Sholinganallur, TNHB Main Road, Chennai - 600 119 என்ற முகவரியில் நடைபெற உள்ளது. பணிக்கு விண்ணப்பம் செய்ய ஜனவரி 31ம் தேதி கடைசி நாளாகும். பதிவு செய்துவிட்டு பிப்ரவரி 1ம் தேதி நடக்கும் இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
https://www.linkedin.com/jobs/view/4137880792












Click it and Unblock the Notifications