TCS ஐடி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. ஜூலை 5ம் தேதி இண்டர்வியூ.. முழு விவரம் இதோ
சென்னை: பிரபல ஐடி நிறுவனமான டிசிஎஸ் சார்பில் தற்போது சர்வீஸ் டெஸ்க் (Service Desk) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கான இண்டர்வியூ ஜூலை 5ம் தேதி நடைபெற உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.
பிரபல ஐடி நிறுவனங்களில் ஒன்றான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS or Tata Consultancy Services) எனும் டிசிஎஸ் பல்வேறு முக்கிய நகரங்களில் செயல்பட்டு வருகிறது. தற்போதைய அறிவிப்பின்படி டிசிஎஸ் நிறுவனத்தில் Service Desk பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இந்த பணிக்கு சம்பந்தப்பட்ட பிரிவில் 3 முதல் 5 ஆண்டுகள் வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். மேலும் சர்வீஸ் டெஸ்க் சப்போர்ட் பங்ஷன் பற்றிய புரிதல்இருக்க வேண்டும். ஆங்கிலத்தில் நன்றாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.
போன்கால், சார்ட் மற்றும் பிற எஸ்டி சேனல்ஸ்வழியாக பணி செய்ய தெரிந்திருக்க வேண்டும். வாரஇறுதி நாட்களிலும் கூட பணியாற்ற தயாராக இருக்க வேண்டும். இந்த பணி தொடர்பான சர்ட்டிபிகேஷன் வைத்திருப்போருக்கு முன்னுரிமை வழங்கப்படும். மல்டி டாஸ்க்கிங் திறமை இருக்க வேண்டும்.
அதேபோல் Negotiation Skills மற்றும் இன்டர்பர்சனல் ஸ்கில்ஸ் இருக்க வேண்டும். ஷிப்ட் அடிப்படையில் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும். இதுதவிர சிஸ்டம் பற்றிய அடிப்படை அறிவு, பேக்அப், நெட்வொர்க் உள்ளிட்டவை பற்றி தெரிந்திருக்க வேண்டும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை, பெங்களூரில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு வழங்கப்படும் மாதம் அல்லது ஆண்டு சம்பளம் என்பது பற்றி தற்போது எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. தகுதி மற்றும் அனுபவம் அடிப்படையில் சம்பளம் நிர்ணயம் செய்யப்பட உள்ளது. விருப்பம் உள்ளவர்கள் முன்கூட்டியே கீழே உள்ள லிங்க் மூலம் பதிவு செய்து கொள்வது நல்லது. அதேபோல் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள முகவரிக்கு ரெஸ்யூம் அனுப்பினால் பிற விவரங்கள் அனுப்பி வைக்கப்படும்.
இந்த பணிக்கான இண்டர்வியூ ஜூலை 5ம் தேதி (சனிக்கிழமை) காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெற உள்ளது. இண்டர்வியூ சென்னை, பெங்களூரில் உள்ள அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இண்டர்வியூவில் Face To Face முறையில் நடக்கும். இதனால் பணியை விரும்புவோர் குறித்த தேதியில் இண்டர்வியூ நடக்கும் அலுவலகங்களுக்கு செல்ல வேண்டும்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
தூத்துக்குடியில் வேலை.. சுகாதார ஆய்வாளர், செவிலியர் என 44 பணியிடங்கள்.. விண்ணப்பிப்பது எப்படி? -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications