சென்னை பள்ளிகளில் ஆசிரியர் வேலை.. எப்படி விண்ணப்பிப்பது.. முழு தகவல்!
சென்னை: சென்னை மாவட்டத்தில் உள்ள ஆதி திராவிடர் நலப்பளிகளில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இடைநிலை, பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்த விவரங்களை இங்கே காணலாம்.
சென்னையில் பல்வேறு இடங்களில் அரசு ஆதி திராவிட நல பள்ளிகள் உள்ளது. இதில், சென்னை விருகம்பாக்கம், வளசரவாக்கம், வட பெரும்பாக்கம் மதுரவாயல் ஆகிய இடங்களில் ஆசிரியர் பணிக்கு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இடைநிலை, பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காலிப்பணியிடங்கள் விவரம்: இடைநிலை ஆசிரியர், இடைநிலை ஆசிரியர் (தலைமை ஆசிரியர்), பட்டதாரி ஆசிரியர் (தமிழ், ஆங்கிலம், சமூக அறிவியல்), முதுகலை பட்டதாரி ஆசிரியர் (இயற்பியல், வரலாறு, வேதியியல், சமூக அறிவியல்) என 11 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
சம்பள விவரம்: இடைநிலை ஆசிரியர் பணிக்கு மாதம் ரூபாய் 12,000/- சம்பளம் வழங்கப்படும். தலைமை ஆசிரியர் பணிக்கு ரூ.12 ஆயிரமும், பட்டதாரி ஆசிரியர் பணிக்கு மாதம் ரூ.15 ஆயிரமும், முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு மாதம் ரூ. 18 ஆயிரமும் சம்பளம் வழங்கப்படும்.
கல்வித் தகுதி: இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு வரையறுக்கப்பட்ட கல்வி தகுதிகளுடன் ஆசிரியர் தகுத்தேர்வில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். மேலும், இல்லம் தேடி கல்வி திட்டத்தில் தன்னார்வலராக பணிபுரிந்து வருபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இதேபோல் பட்டியலினத்தவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும். இதேபோல் பள்ளி அருகே இருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி?: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: வருகிற 8ம் தேதி மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பங்கள் சென்று சேரவேண்டும்.
-
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ்












Click it and Unblock the Notifications