சென்னையில் ஐடி வேலை.. டிகிரி போதும்.. அனுபவம் வேண்டாம்.. பிரபல நிறுவனம் தரும் சூப்பர் வாய்ப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: மஹிந்திரா குரூப்பை சேர்ந்த டெக் மஹிந்திரா நிறுவனம் சார்பில் சென்னை அம்பத்தூரில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு டிகிரி முடித்து பணி அனுபவம் உள்ளவர்கள் மற்றும் பணி அனுபவம் இல்லாதவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.

முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்று டெக் மஹிந்திரா (Tech Mahindra). மஹிந்திரா குரூப்பை சேர்ந்த இந்த நிறுவனம் மகாராஷ்டிராவில் புனேவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. சென்னையிலும் இந்த நிறுவனத்தின் கிளை உள்ளது.

it jobs job

தற்போது சென்னையில் உள்ள டெக் மஹிந்திரா நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

டெக் மஹிந்திரா நிறுவனத்தில் தற்போது கஸ்டமர் சப்போர்ட் எக்ஸிக்கியூட்டிவ் (Customer Support Executive) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு டிகிரி முடித்து பணி அனுபவம் உள்ளவர்கள் மற்றும் பணி அனுபவம் இல்லாதவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.

விண்ணப்பம் செய்வோருக்கு தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகள் தெரிந்திருக்க வேண்டும். ஷிப்ட் அடிப்படையில் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும். பெண்களுக்கு காலை 8 மணி முதல் இரவு 10 மணி நேரத்துக்கான ஷிப்ட்டில் பணியாற்ற வாய்ப்பு வழங்கப்படும். ஆண்களுக்கு இரவு ஷிப்ட் என்பது இருக்கும். வாரத்தில் 6 நாட்கள் பணி இருக்கும்.

தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான மாதசம்பளம் குறித்த அறிவிப்பு எதுவும் இடம்பெறவில்லை. சம்பளம் குறித்த விபரம் என்பது கடைசி கட்ட இண்டர்வியூவின்போது தெரிவிக்கப்படும். மாதசம்பளம் என்பது டெக் மஹிந்திரா நிறுவனத்தில் விதி மற்றும் விண்ணப்பத்தாரர்களின் பணி அனுபவம், திறமையை பொறுத்து மட்டுமே நிர்ணயம் செய்யப்படும். இந்த சம்பளம் என்பது ஒவ்வொவருக்கும் வித்தியாசமாக கூட இருக்கலாம்.

இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் உள்ள நிறுவனத்துக்கு சென்று பணியாற்ற வேண்டி இருக்கும். நிறுவனத்தை சுற்றி 15 கிலோமீட்டர் தொலைவுக்கு Cab வசதி உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்து விண்ணப்பம் செய்யலாம். பணி குறித்த அறிவிப்பு வெளியாகி 2 வாரம் ஆகிவிட்டது. இதனால் எப்போது வேண்டுமானாலும் விண்ணப்ப தேதி முடியலாம் என்பதால் முடிந்தவரை சீக்கிரமாக விண்ணப்பம் செய்வது நல்லது.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+