தயாரா? மாதஊதியம் ரூ.29,200 டூ ரூ.1.19 லட்சம்.. அரசின் டிஎச்டிசி நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்பு!
டெல்லி: மத்திய அரசின் தெஹ்ரி ஹைட்ரோ டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் காலியாக உள்ள ஜூனியர் என்ஜினீயர் டிரெய்னி பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு குறைந்தபட்சமாக ரூ.29,200 முதல் அதிகபட்சமாக ரூ.1.19 லட்சம் வரை மாத சம்பளம் வழங்கப்பட உள்ளது.
மத்திய மின்சாரத்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் நிறுவனங்களில் ஒன்று தான் டிஎச்டிசி(THDC) எனும் தெஹ்ரி ஹைட்ரோ டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் லிமிடெட் (Tehri Hydro Development Corporation Limited). இங்கு காலியாக உள்ள ஜூனியர் என்ஜினீயர் டிரெய்னி பணியிடங்கள் நிரப்பப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

காலியிடங்கள்: டிஎச்டிசி நிறுவனத்தில் தற்போதைய அறிவிப்பின்படி ஜூனியர் என்ஜினீயர் டிரெய்னி பதவிக்கு மொத்தம் 181 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். துறை வாரியாக பார்த்தால் சிவில் என்ஜினீயரரிங், எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் பிரிவுக்கு தலா 72 பேரும், மெக்கானிக்கல் என்ஜினீயரிங் பிரிவுக்கு 37 பேரும் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
கல்விதகுதி: இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் குறிப்பிட்ட பிரிவில் டிப்ளமோ, பிஇ, பிடெக், பிஎஸ்சி படிப்பை முடித்திருக்க வேண்டும். விண்ணப்பம் செய்வோர் 27 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது வரம்பு என்பது 2023 ஜூலை மாதம் 7 ம் தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும். மேலும் அரசு விதிகளின் படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது தளர்வும் உண்டு.
மாதசம்பளம்: பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சமாக ரூ.29,200-ம், அதிகபட்சமாக ரூ.1.19 லட்சமும் சம்பளமாக வழங்கப்படும். விண்ணப்பம் செய்வோர் எழுத்து தேர்வு மற்றும் நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். விண்ணப்ப கட்டணமாக ரூ.600 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி, பிடபிள்யூபிடி, முன்னாள் படை வீரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் என்பது இல்லை.
கடைசி நாள் எப்போது: தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் thdc.co.in இணையதளம் மூலம் ஜூலை 7 ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். முதலில் விண்ணப்ப தேதி ஜூன் மாதம் 30 என இருந்த நிலையில் தற்போது தேதி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் உத்தர பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் பணியமர்த்தப்படுவார்கள் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
விண்ணப்ப தேதி நீட்டிப்புக்கான அறிவிப்பை காண Click Here
பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications