ரெடியா? நோ எக்ஸாம்.. மாதசம்பளம் ரூ.50,000 முதல் ரூ.1.80 லட்சம்.. அழைக்கும் டிஎச்டிசி.. சூப்பர் வேலை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய அரசின் தெஹ்ரி ஹைட்ரோ டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. எழுத்து தேர்வு இன்றி நேர்க்காணல் முறையில் இந்த பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு குறைந்தபட்சமாக ரூ.50 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.1.80 லட்சம் வரை மாத சம்பளம் வழங்கப்பட உள்ளது.

மத்திய மின்சாரத்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் நிறுவனங்களில் ஒன்று தான் டிஎச்டிசி(THDC) எனும் தெஹ்ரி ஹைட்ரோ டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் லிமிடெட் (Tehri Hydro Development Corporation Limited).

 THDC recruitment for various Engineer Trainee jobs salary from RS.50,000 to Rs.1.80 lakhs

இங்கு காலியாக உள்ள என்ஜினியர் டிரெய்னி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. மொத்தம் 90 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அதன்படி என்ஜினியர் டிரெய்னி(சிவில்), என்ஜினியர் டிரெய்னி (எலக்ட்ரிக்கல்) பணிக்கு தலா 36 பேர், என்ஜினியர் டிரெய்னி (மெக்கானிக்கல்) பணிக்கு 18 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

என்ஜினியர் டிரெய்னி(சிவில்) பணிக்கு பிஎஸ்சி, பிஇ, பிடெக் பிரிவில் சிவில் படிப்பை முடித்திருக்க வேண்டும். என்ஜினியர் டிரெய்னி(எலக்ட்ரிக்கல்) பணிக்கு பிஎஸ்சி, பிஇ, பிடெக் பிரிவில் எலக்ட்ரிக்கல்(Power), எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், பவர் சிஸ்டம்ஸ் மற்றும் ஹை வோல்டேஜ்/ பவர் என்ஜினியரிங் படிப்பையும், என்ஜினியர் டிரெய்னி (மெக்கானிக்கல்) பிரிவில் பிஎஸ்சி, பிஇ, பிடெக் பிரிவில் மெக்கானிக்கல், ஆட்டோமேஷன் என்ஜினியரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். ஓபிசி பிரிவினருக்கு 3 வயது வரையும், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வயது வரையும், பிடபிள்யூ பிரிவினருக்கு அதிகபட்சமாக 15 வயது வரையும் தளர்வு அளிக்கப்பட உள்ளது. வயது வரம்பு என்பது 2023 ஏப்ரல் மாதம் 5ம் தேதி என்ற அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும்.

 THDC recruitment for various Engineer Trainee jobs salary from RS.50,000 to Rs.1.80 lakhs

பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாத சம்பளமாக குறைந்தபட்சம் ரூ.50 ஆயிரம் வழங்கப்படும். அதிகபட்சமாக ரூ.1.180 லட்சம் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் thdc.co.in இணைதளம் மூலம் மே மாதம் 4ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்யலாம்.
விண்ணப்பம் செய்வோர் GATE மார்க்ஸ் மற்றும் நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here

பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+