ரூ.18,000 வாங்கியவர்கள்.. இனி ரூ.51,000 வாங்குவார்கள்.. 8வது ஊதியக் குழு டீம் ரெடி.. அரசு அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி : 8வது ஊதியக் குழு நியமனங்கள் தொடங்கிவிட்டன. 8வது ஊதியக் குழுவில் ஆலோசகர்கள் உட்பட 42 காலியிடங்கள் மற்றும் தலைவர் பதவியை நிரப்புவதற்கான செயல்முறையை அரசாங்கம் தொடங்கியுள்ளது, இது அடுத்த மாத இறுதியில் இவர்களின் நியமனம் பற்றிய அறிவிப்பு வெளியாகும். சிலரின் நியமனம் தேர்வாகி முடிந்துவிட்டது. ஆனால் எல்லோரின் நியமனம் முடிந்த பின்பே அறிவிப்பு வெளியாகும்.

8வது ஊதியக்குழு காரணமாக அரசு ஊழியர்களின் சம்பளம் பல மடங்கு உயரும். எந்த அளவிற்கு அரசு ஊழியர்கள் சம்பளம் உயரும் என்று இங்கே பார்க்கலாம்.

எவ்வளவு சம்பளம் உயரும்?

பியூன்கள், அட்டென்டர்கள் மற்றும் உதவி ஊழியர்கள் இந்த வகையின் கீழ் வருகிறார்கள். இவர்களின் அடிப்படை ஊதியம், முன்பு ரூ.18,000 ஆக இருந்தது.. இனி ரூ.51,480 ஆக மாற்றியமைக்கப்படும், இவர்களின் சம்பளம் ரூ.33,480 அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கீழ் லெவல் கிளர்க் இந்த பதவியின் கீழ் வருவார்கள். இவர்களின் அடிப்படை ஊதியம் ரூ.19,900ல் இருந்து ரூ.56,914 ஆக உயர்த்தப்படும். அதாவது இவர்களுக்கு ரூ.37,014 சம்பள உயர்வு ஏற்படும்.

காவல்துறை கான்ஸ்டபிள்கள் இந்த பிரிவின் கீழ் வருகிறார்கள். இவர்களுக்கு ரூ.21,700 ஆக இருந்த அடிப்படை ஊதியம் ரூ.62,062 ஆக உயர்த்தப்படும். அதாவது ரூ.40,362 சம்பளம் உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The appointment for the formation of the 8th Pay Commission committee started

கிரேடு D ஸ்டெனோகிராபர்கள் மற்றும் ஜூனியர் கிளார்க்குகள் இந்த வகைக்கு கீழ் வருவார்கள். அவர்களின் அடிப்படை ஊதியம் முன்பு ரூ. 25,500. இதில் ரூ. 47,430 உயர்வு செய்யப்பட்டு ரூ.72,930 ஆக சம்பளம் மாற்றியமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மூத்த கிளர்க்குகள் மற்றும் உயர்மட்ட தொழில்நுட்ப பணியாளர்கள் இந்த பிரிவின் கீழ் வருவார்கள்.. இவர்களின் அடிப்படை சம்பளம் ரூ.29,200 ஆக இருந்தது ரூ.83,512 ஆக அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதாவது ரூ.54,312 சம்பள உயர்வு ஏற்படும்.

இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் இந்த நிலைக்கு கீழ் வருவார்கள். அவர்களின் அடிப்படை ஊதியம் ரூ.35,400ல் இருந்து ரூ.1,01,244 ஆக உயரும். அதாவது ₹65,844 சம்பள உயர்வு ஏற்படும்..

இந்த பிரிவில் கண்காணிப்பாளர்கள், பிரிவு அலுவலர்கள் மற்றும் உதவி பொறியாளர்கள் உள்ளனர். அவர்களின் தற்போதைய அடிப்படை ஊதியமான ₹44,900ல் இருந்து 83,514 ருபாய் அதிகரிக்கும். அதன்படி புதிய சம்பளம் ரூ.1,28,414 ஆக மாற்றியமைக்கப்படும்.

மூத்த பிரிவு அதிகாரிகள் மற்றும் உதவி தணிக்கை அதிகாரிகள் இந்த பிரிவின் கீழ் உள்ளனர். இவர்களின் அடிப்படை ஊதியம் தற்போது ரூ.47,600ல் இருந்து ரூ.88,536 அதிகரித்து ரூ.1,36,136 ஆக உயர்த்தப்பட வாய்ப்புள்ளது.

அடுத்த நிலையில் துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் கணக்கு அலுவலர்கள் உள்ளனர். அவர்களின் தற்போதைய அடிப்படை ஊதியமான ரூ.53,100.. விரைவில் ரூ.1,51,866 ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் ரூ.98,766 சம்பள உயர்வு அவர்களுக்கு கிடைக்கும்.

சிவில் சேவைகளில் நுழைவு நிலை அதிகாரிகள் உட்பட குரூப் ஏ அதிகாரிகள் இந்த வகையைச் சேர்ந்தவர்கள். தற்போது ரூ.56,100 ஆக உள்ள அவர்களின் அடிப்படை ஊதியம் ரூ.1,60,446 ஆக மாற்றியமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+