திருத்தணி முருகன் கோயிலில் வேலை.. அறநிலையத்துறை கொடுத்த பொன்னான வாய்ப்பு! ஒரு நாள் தான் டைம் இருக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை கீழ் இயங்கும் திருத்தணி முருகன் கோயிலில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தட்டச்சர், கூர்க்கா, செவிலியர், ஓட்டுனர், கம்ப்யூட்டர் ஆபரேட்டர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்களும் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.86 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும்.

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை, பிரசித்தி பெற்ற கோயில்களின் நிர்வாக பணிகளை மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு கோயில்கள் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் செயல்படுகின்றன. இந்தக் கோயில்களில் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள். அர்ச்சகர் முதல் கோயில் காவலர் வரை பல்வேறு பணியிடங்களை அறநிலையத் துறை நியமித்து வருகிறது.

job chennai employment

திருத்தணி முருகன் கோயிலில் வேலை

தமிழக அரசுத்துறை வேலை என்பதால், இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் வேலை செய்யும் பணியாளர்களுக்கு கைநிறைய சம்பளமும் சலுகைகளும் அளிக்கப்படுகின்றன. இதனால், இந்து சமய அறநிலையத் துறை வெளியிடும் காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு தேர்வர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், திருத்தணியில் உள்ள முருகன் கோயிலில் பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை ஒருநாள் மட்டுமே அவகாசம் உள்ளது. எனவே, அறநிலையத் துறை வெளியிட்ட இந்த தேர்வு அறிவிப்பை மீண்டும் ஒரு நினைவூட்டலாக பார்க்கலாம்.

பணியிடங்கள் விவரம்:

கூர்கா - 01, இரவுக்காவலர் - 02, மிருதங்கம் - 01, புஜங்கம் - 01, வேதபாராயணம் - 01, குடைக்காரர் - 01, மாலைக்கட்டி - 01, தமிழ்ப் புலவர் - 01, சமயப் பிரசங்கி - 01, சித்த மருத்துவர் - 01, ஓட்டுநர் - 02, செவிலியர் - 01, கம்ப்யூட்டர் ஆபரேட்டர் - 02, நாதஸ்வரம் - 03, துப்புரவாளர் - 01, தட்டச்சர் - 02, வேலையாள் - 02, மேளம் - 01, காவலர் - 01 - என மொத்தம் 26 பணியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி:

* கூர்கா, இரவுக்காவலர், குடைக்காரர், துப்புரவாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்தால் போதும்.
* மிருதங்கம், புஜங்கம், வேதபாராயணம், நாதஸ்வரம் ஆகிய பணியிடங்களுக்கு தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். அதோடு, சம்பந்தப்பட்ட பிரிவில் இசைக்கல்லூரியில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

* தமிழ்ப் புலவர் பணிக்கு பி.ஏ., எம்.ஏ. (தமிழ்) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
* ஓட்டுநர் பணிக்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஓட்டுநர் உரிமம் அவசியம். குறைந்தது ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
* தட்டச்சர் பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் டைப்ரைட்டிங் தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

18 வயது முதல் 45 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்:

* அதிகபட்சமாக ஓட்டுநர் பணிக்கு ரூ.58,600 வரை வழங்கப்படும்.

நாளை விண்ணப்பிக்க கடைசி நாள்

தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, நேர்முகத் தேர்வு மூலம் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்க வரும் 05.11.2025 கடைசி நாளாகும். அதாவது நாளை ஒருநாள் மட்டுமே அவகாசம் உள்ளது. எனவே, தேவையான கல்வித் தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தேர்வு அறிவிப்பை முழுமையாகப் படித்து உறுதிசெய்த பிறகு மறக்காமல் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பப் படிவம், தகுதி விவரங்கள், நிபந்தனைகள் மற்றும் இதர விவரங்கள் அடங்கிய விண்ணப்பப் படிவத்தினை ரூ.100/- திருக்கோயில் தலைமை அலுவலகத்தில் செலுத்தி, அலுவலக நாட்களில் அலுவலக நேரங்களில் 04.11.2025 பிற்பகல் 5.45 மணி வரை நேரில் வந்து கேட்டு தெரிந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தேர்வு அறிவிப்பினை படிக்க:
https://hrce.tn.gov.in/resources/docs/hrcescroll_doc/238/document_1.pdf

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+