திருவண்ணாமலை மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலை.. டிகிரி முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.. ரெடியா
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் மாவட்ட நலவாழ்வு சங்கம், தேசிய நல்வாழ்வு குழும திட்டத்தின் கீழ் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 6 பணியிடங்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தேவையான கல்வி தகுதி, சம்பள விவரம், விண்ணப்பிப்பது எப்படி உள்ளிட்ட விவரங்களை கீழே விரிவாக பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்: தகவல் தொழில் நுட்ப ஒருங்கிணைப்பாளர் (01 பணியிடம்) MLHP -03 பணியிடங்கள், திட்ட மேலாளர், தரவு உதவியாளர் தலா 1 பணியிடம் என மொத்தம் 6 பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கல்வி தகுதி: தகவல் தொழில் நுட்ப ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எம்.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ் , எம்.சி.ஏ, பிடெக், பிஇ ஆகிய படிப்பு முடித்தவர்வகள் விண்ணப்பிக்கலாம். MHLP பணியிடத்திற்கு DGNM/BSC நர்சிங்/ பி.எஸ்.சி நர்சிங் உடன் ஒருங்கிணைந்த படிப்பு ஆகிய ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
திட்ட மேலாளர் பணியிடத்திற்கு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து (BAMS/BUMS/ BHMS/BNYS ஆகிய பாடப்பிரிவில் பட்டபடிப்பு முடித்தவர்கள் விண்னப்பிக்கலாம். அதோடு, பொது சுகாதாரத்துறையில் பணியாற்றிய அனுபவம் இருத்தல் வேண்டும். தரவு உதவியாளர் பணியிடத்திற்கு கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் /ஐடி/ பிஸ்சினஸ் அட்மினிஷ்ட்ரேஷன்/ பி.டெக் பிசிஏ, பிபிஏ, பி.எஸ்.சி ஐடி உள்ளிட்ட பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பள விவரம்: திட்ட பணியாளர் பணிக்கு மாதம் ரூ.21 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும். திட்ட மேலாளர் பணிக்கு மாதம் ரூ.30 ஆயிரம் சம்பளமும் தரவு உதவியாளர் பணிக்கு மாதம் ரூ.15 ஆயிரம் சம்பளமும் வழங்கப்படும். இந்த பணியிடங்கள் அனைத்தும் ஒப்பந்த அடிப்படையிலானது.
விண்ணப்பிப்பது எப்படி?: மேற்கூறிய பணியிடத்திற்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தபால் மூலமாகவோ நேரிலோ விண்ணப்பிக்கலாம். தகவல் தொழில் நுட்ப ஒருங்கிணைப்பளர் பணிக்கு விண்ணப்பிக்க வரும் 27.09.2023 கடைசி நாளாகும். திட்ட மேலாளர் மற்றும் தரவு உதவியாளர் பணிக்கு விண்ணபிக்க வரும் 04.10.2023 கடைசி நாளாகும்.
அதேபோல் MHLP பணியிடத்திற்கு வரும் 05.10.2023 கடைசி நாளாகும். தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான முகவரி மற்றும் தேவையான கல்வி தகுதி சான்றுகள் உள்ளிட்ட விவரங்களை https://tiruvannamalai.nic.in/notice_category/recruitment/ என்ற இணையதள முகவரிக்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications