மூணே நாள் தான்.. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் வேலை..லட்சக்கணக்கில் சம்பளம்! உடனே விண்ணப்பிங்க!
திருவண்ணாமலை: உலகப் புகழ்பெற்ற திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் 18 பிரிவுகளில் 109 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ளது. பத்தாம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு வரை தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். இந்து சமயத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே இந்த பணிக்கு விண்ணப்பிக்க முடியும்.
பணியின் பெயர் - காலிப்பணியிடம்: 1. தட்டச்சர் -1, 2.காவலர் -70 ( ஆண்கள் 60, பெண்கள் 10) 3.கூர்க்கா 2, 4. ஏவலால் (பண்ணை சாகுபடி) 2, 5.உப கோவில் பெருக்குபவர்- 2, 6. கால்நடை பராமரிப்பாளர்-1, 7.உப கோவில் காவலர்-2, 8.திருமஞ்சனம்-3, 9.முறை ஸ்தானிகம் - 10.ஒடல்- 2, 11.தாளம்-3, 12.தொழில்நுட்ப உதவியாளர் ( மின்னணு மற்றும் தொலைதொடர்பு)-1, 13.பிளம்பர்-4, 14.உதவி மின் பணியாளர் -2, 15.தலைமை ஆசிரியர் -1, 16. தேவார ஆசிரியர் -1, 17.சங்கீத இசை ஆசிரியர்-1, 18.ஆகம ஆசிரியர்-1 என மொத்தம் 18 இனங்களில் 109 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு முதல் அந்தந்த பணிகளுக்கு ஏற்றவாறு கல்வித் தகுதி நியமிக்கப்பட்டுள்ளது.
ஊதிய விபரம்: 10,000 முதல் 1,16,200 வரை பணியிடங்களுக்கு ஏற்ப ஊதியம் வழங்கப்படும்
வயதுவரம்பு: அனைத்து பணிகளுக்கும் 18 முதல் 45-க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். நேர்முகத் தொடர்பான விவரங்கள் தகுதியானவர்களுக்கு தபால் மூலம் தெரிவிக்கப்படும்.
https://hrce.tn.gov.in/resources/docs/hrcescroll_doc/195/document_1.pdf
விண்ணப்பிக்கும் முறை: www.hrce.in அல்லது www.annamalaiyar.hrce.tn.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவுத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து அதனுடன் ரூ.25 மதிப்புள்ள அஞ்சல் வில்லை ஒட்டிய சுய விலாசமிட்ட ஒப்புகை அட்டை, அஞ்சல் உறை ஆகியவற்றை இணைத்து அனுப்ப வேண்டும். விண்ணப்ப உறையின் மீது பணியின் வரிசை எண் மற்றும் பணியின் பெயரை குறிப்பிட வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: இணை ஆணையர், செயல் அலுவலர், அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோவில், திருவண்ணாமலை - 606601
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடை நாள்: 28.2.2025
முழு விபரங்களுக்கு https://hrce.tn.gov.in/resources/docs/hrcescroll_doc/195/document_1.pdf என்ற தளத்தையோ, தமிழக இந்து சமய அறநிலையத்துறையின் https://hrce.tn.gov.in/hrcehome/index.php என்ற அதிகாரப்பூர்வ இணைய தளத்தை பார்க்கலாம்..
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
அஷ்டமத்து சனி ஓவர்! இனிதான் விஜய் ஆட்டம் ஆரம்பம்! ஆட்சியை இழக்கவும் தயங்க மாட்டார்! ஷெல்வி கணிப்பு -
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு












Click it and Unblock the Notifications