TIDEL Park வேலைவாய்ப்பு.. பிஇ/பிடெக் படித்தவர்களுக்கு யோகம்.. செம சான்ஸ்! தட்டி தூக்குங்க
சென்னை: டைடல் பார்க் நிறுவனத்தில், தொழில்நுட்ப உதவியாளர், நிர்வாக உதவியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. பி இ / பி டெக் முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். தேர்வு எதுவும் இல்லாமல் நேர்காணல் மூலமாக விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மாதம் ரூ.1,87,00 வரை சம்பளம் வழங்கப்படும். சென்னை, சேலம், தூத்துக்குடி, மதுரை, திருச்சி ஆகிய இடங்களில் பணியில் அமர்த்தப்படுவார்கள்.
டைடல் பார்க் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி என்ன? வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

பணியிடங்கள் விவரம்:
1. தொழில்நுட்ப உதவியாளர் / பல்துறை நிபுணர் தொழில்நுட்ப வல்லுநர் - 04
2. மேலாளர் (செயல்பாடு மற்றும் பராமரிப்பு) - 04
3. நிர்வாக உதவியாளர் - 04
4. நிர்வாக பொறியாளர் (சிவில்) - 01
5. உதவி பொறியாளர் (சிவில்) - 02
6. உதவி பொறியாளர் (மின்சாரம்) - 02
7. மேற்பார்வை பொறியாளர் / நிர்வாக பொறியாளர் (மின்சாரம்) - 01
8. மேலாளர் (நிதி மற்றும் கணக்குகள்) - 01 என மொத்தம் 19 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
கல்வித் தகுதி:
தொழில் நுட்ப உதவியாளர் எனப்படும் டெக்னிக்கல் அசிஸ்டண்ட் / பல்துறை நிபுணர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் என்ஜினியரிங் பட்டம் முடித்து இருக்க வேண்டும். அல்லது மெக்கானிக்கல்/ இஇஇ/ இ&சி ஆகிய பிரிவுகளில் டிப்ளமோ முடித்து இருக்க வேண்டும். மெக்கானிக்கல் துறையில் இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம். தமிழ் மற்றும் ஆங்கிலம் நன்கு தெரிந்து இருக்க வேண்டும்.
அசிஸ்டன்ட் என்ஜினியர் (சிவில்) பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் சிவில் பிரிவில் என்ஜினியரிங் முடித்து இருக்க வேண்டும். 5 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.
மேனேஜர் (ஃபைனான்ஸ் & அக்கவுண்ட்ஸ்) பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் ஏதாவது ஒரு பட்டப்படிப்புடன் சிஏ முடித்து இருக்க வேண்டும். 7 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.
கல்வித் தகுதி, பணி அனுபவம் குறித்த முழு விவரங்களை தேர்வர்கள் தேர்வு அறிவிப்பில் படித்து தெரிந்து கொள்ளலாம்.
சம்பளம் எவ்வளவு?
* தொழில்நுட்ப உதவியாளர் / பல்துறை நிபுணர் தொழில்நுட்ப வல்லுநர் - ரூ.30,000/-
* மேலாளர் (செயல்பாடு மற்றும் பராமரிப்பு) - ரூ.50,000/-
* நிர்வாக உதவியாளர் - ரூ.25,000/-
* நிர்வாக பொறியாளர் (சிவில்) - ரூ.80,000/-
* உதவி பொறியாளர் (சிவில்) - ரூ.50,000/-
* உதவி பொறியாளர் (மின்சாரம்) - ரூ.1,00,000/-
* மேற்பார்வை பொறியாளர் / நிர்வாக பொறியாளர் (மின்சாரம்) - ரூ.1,00,000/-
* மேலாளர் (நிதி மற்றும் கணக்குகள்) - ரூ.59,300/- முதல் ரூ.1,87,700/- (நிலை 25)
பணி அமர்த்தப்படும் இடங்கள்:
சென்னை, விழுப்புரம், தஞ்சாவூர், சேலம் மற்றும் தூத்துக்குடி, மதுரை, திருச்சி ஆகிய இடங்களில் பணியில் அமர்த்தப்படுவார்கள்
விண்ணப்பிப்பது எப்படி?
தேவையான கல்வி தகுதி பணி அனுபவம் இருக்கும் விண்ணப்பதாரர்கள் 19.03.2025 முதல் 02.04.2025 வரை ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வேண்டிய முகவரி https://www.tidelpark.com/ . தேர்வு கிடையாது. தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.
நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள https://www.tidelpark.com/en/careers இந்த லிங்கை கிளிக் செய்யவும்.












Click it and Unblock the Notifications