திருநெல்வேலி சுற்றுவட்டார பகுதிகளில் வேலை.. 8-ம் வகுப்பு டூ டிகிரி கல்வி தகுதி.. உடனே அப்ளை பண்ணுங்க
சென்னை: ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் திருநெல்வேலி மண்டல பொது சுகாதார நீர்ப்பகுப்பாய்வகத்தில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. வேதியியலாளர் (Chemist), ஆய்வகம் தொழில்நுட்ப வல்லுநர், ஆய்வக உதவியாளர் என மொத்தம் 30 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. 8 ஆம் வகுப்பு முதல் டிகிரி முடித்தவர்கள் வரை இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறையில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் திருநெல்வேலி மாவட்டம், மண்டல பொது சுகாதார நீர்ப்பகுப்பாய்வகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் எத்தனை பணியிடங்கள் காலியாக உள்ளன. விண்ணப்பிப்பது எப்படி என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்

பணியிடங்கள் விவரம்:
வேதியியலாளர் (Chemist), ஆய்வகம் தொழில்நுட்ப வல்லுநர், ஆய்வக உதவியாளர் என மொத்தம் 30 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. திருநெல்வேலி, ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை, மதுரை, கன்னியாகுமரி, தேனி ஆகிய மாவட்டங்களில் தலா 1 இடங்கள் என 30 பணியிடங்களையும் நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கல்வித் தகுதி:
* வேதியியலாளர் பணிக்கு பிஎஸ்சி அல்லது எம்.எஸ்.சி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். கூடுதலாக டேட்டா எண்ட்ரியில் கெமிஸ்ட்ரி அடிஷனல் சான்றிதழ் அல்லது ஆபிஸ் மேனேஜ்மேண்ட் சர்டிபிகேட் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
* ஆய்வக டெக்னிஷியன் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் 12 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் மெடிக்கல் ஆய்வக டெக்னாலஜி (DMLT) டிப்ளமோ முடித்து இருக்க வேண்டும்.
* ஆய்வக உதவியாளர் பணிக்கு 8 ஆம் வகுப்பு முடித்து இருந்தால் போதுமானது. விண்ணப்பதாரர்கள் கல்வி தகுதி குறித்த முழு விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள தேர்வு அறிவிப்பில் படித்து தெரிந்து கொள்ளலம.
சம்பளம் எவ்வளவு?:
* வேதியியலாளர் - மாதம் ரூ.21,000
* ஆய்வக டெக்னிஷியன் - ரூ.13,000
* ஆய்வக உதவியாளர் - ரூ. 8,500
தேர்வு முறை: ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் முற்றிலும் தற்காலிகமாக பணிபுரிவதற்கு 11 மாத கால ஒப்பந்த அடிப்படையில் இப்பணிகள் நிரப்பப்பட உள்ளன. இவை முற்றிலும் தற்காலிகமானவை என்பதால் இதன் மூலம் நிரந்தரப்பணியோ, முன்னுரிமையோ, சலுகைகளோ பிற்காலத்தில் கோர இயலாது.
விண்ணப்பிப்பது எப்படி?: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மிகாதவர்களாக இருக்க வேண்டும். தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 11.03.2025 மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்களை https://tirunelveli.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்ப படிவம், கல்வித்தகுதி மற்றும் இதர சான்றிதழ்களை 11.03.2025 மாலை 05.00 மணிக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
The Chief Water Analyst,
Regional Public Health Water Analysis Laboratory,
Anna Nagar, Tirunelveli,
PIN-627011. Phone: 0462-2900353 என்ற முகவரிக்கு பதிவஞ்சல் மூலமாக விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தேர்வு அறிவிப்பினை படிக்க:https://cdn.s3waas.gov.in/s36a9aeddfc689c1d0e3b9ccc3ab651bc5/uploads/2025/03/2025030629.pdf
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி!












Click it and Unblock the Notifications