ரூ.22,000 டூ ரூ.45,000 சம்பளம்.. ஆசிரியர் முதல் உதவியாளர் வரை! திருப்பூர் சைனிக் பள்ளியில் வேலை ரெடி

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: திருப்பூர் அமராவதி நகரில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் சைனிக் பள்ளியில் ஆசிரியர், ஆய்வக உதவியாளர் உள்பட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது. 12ம் வகுப்பு முடித்தவர்கள் முதல் பிஎப்ட படித்தவர்கள் இதற்கு விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.22 ஆயிரம் முதல் ரூ.45 ஆயிரம் என பணியை பொறுத்து சம்பளம் வழங்கப்பட உள்ளது.

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் சார்பில் இந்தியாவில் பல இடங்களில் சைனிக் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டம் அமராவதிநகரில் உள்ள சைனிக் பள்ளியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது. இந்த பணிகள் குறித்த விபரங்கள் வருமாறு:

 Tirupur Amaravathi Nagar Sainik School recruitment 2023 for various post including teacher

இயற்பியல் ஆசிரியர்: இந்த பணிக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளார். இந்த பணியை விரும்புவோர் இயற்பியல் துறையில் எம்எஸ்சி மற்றும் பிஎட் முடித்திருக்க வேண்டும். மாதம் ரூ.45 ஆயிரம் சம்பளமாக வழங்கப்படும். விண்ணப்பத்தாரர்கள் 21 வயது முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கணித ஆசிரியர்: இந்த பணிக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளார். இந்த பணிக்கு கணிதத்தில் பிஎஸ்சி-பிஎட் படித்திருக்க வேண்டும். மாதம் ரூ.40 ஆயிரம் சம்பளமாக கிடைக்கும். பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 21 வயது முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

ஆங்கில ஆசிரியர்: இந்த பணிக்கும் ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளார். இதற்கு ஆங்கிலத்தில் பிஏ , பிஎட் முடித்திருக்க வேண்டும். மாதம் ரூ.40 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பம் செய்வோர் 21 வயது முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

ஆய்வக உதவியாளர்: இயற்பியல் ஆய்வகத்துக்கான உதவியாளர் பணிக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளார். இந்த பணிக்கு 12ம் வகுப்பில் இயற்பியலை ஒரு பாடமாக படித்து முடித்திருக்க வேண்டும். மாதம் ரூ.25 ஆயிரம் சம்பளமாக வழங்கப்படும். விண்ணப்பத்தாரர்கள் 18 வயது முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

பேண்ட் மாஸ்டர்: இந்த பணிக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளார். பச்மார்ஹி ஏஇசி பயிற்சி கல்லூரியில் பேண்ட் மாஸ்டர், பேண்ட் மேஜர், டிரம் மேஜர் படிப்பு அல்லது அதற்கு நிகரான கடற்படை, விமானப்படை படிப்புகளை முடித்திருக்க வேண்டும். மாதம் ரூ.28 ஆயிரம் சம்பளமாக கிடைக்கும். பணியை பெற விரும்பும் விண்ணப்பத்தாரர்கள் 21 வயது முதல் 50 வயதுக்குள் இருக்க வேண்டும்.

Counselor: இந்த பணிக்கும் ஒருவர் மட்டுமே தேர்வு செய்யப்பட உள்ளார். முதுகலை பிரிவில் சைக்கலாஜி, கிளினீக்கல் சைக்கலாஜி அல்லது சைல்ட் டெவலப்மென்ட் இல்லாவிட்டால் டிப்ளமோவில் கேரியர் கைடென்ஸ் அன்ட் கவுன்சிலிங் படிப்பை முடித்திருக்க வேண்டும். மாதம் ரூ.30 ஆயிரம் சம்பளமாக கிடைக்கும். விண்ணப்பம் செய்வோர் 21 வயது முதல் 50 வயதுக்குள் இருக்க வேண்டும்.

பிஇஎம்/பிடிஐ -கம் மேட்ரான் (பெண்): PEM/PTI-cum-matron (Female) பணிக்கும் ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளார். இதற்கு இடைநிலை படிப்பை முடித்து ஆங்கிலத்தில் நல்ல புலமை பெற்றிருக்க வேண்டும். மாதம் ரூ.22 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பத்தாரர்கள் 21 வயது முதல் 50 வயதுக்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிப்பது எப்படி: மேலும் இந்த பணிகளுக்கு விண்ணப்பம் செய்வோரில் அரசு விதிகளின்படி வயது தளர்வு என்பது வழங்கப்படும்.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் www.sainikschoolamaravahinagar.edu.in எனும் இணையதளத்தில் விண்ணப்பம் டவுன்லோட் செய்து பூர்த்தியிட்டு உரிய ஆவணங்களின் நகல்களை இணைத்து ‛‛Principal, Sainik School, Amaravathinagar, Pin - 642 102, Udumalpet Taluk, Tiruppur District என்ற முகவரிக்கு டிசம்பர் 26ம் தேதிக்குள் கிடைக்கும்படி அனுப்பி வைக்க வேண்டும்.

தேர்வு செய்வது எப்படி: விண்ணப்ப கட்டணமாக ரூ.300 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி பிரிவினர் என்றால் ரூ.200 செலுத்த வேண்டும். விண்ணப்ப கட்டணத்தை செலுத்துவது கீழே உள்ள அதிகாரப்பூர்வ இணைப்பில் விரிவாக கூறப்பட்டுள்ளது. இப்படி பணிக்கு விண்ணப்பம் செய்வோர் எழுத்து தேர்வு, திறனறி தேர்வு, நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here

பணிக்கான விண்ணப்ப படிவம் டவுன்லோட் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+