ரூ.45,000 வரை சம்பளம்..10ம் வகுப்பு முதல் பிஎட் படித்தவரா? திருப்பூர் சைனிக் பள்ளியில் சூப்பர் வேலை

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: திருப்பூர் அமராவதி நகரில் இயங்கிவரும் மத்திய அரசின் சைனிக் பள்ளியில் மாதம் ரூ.45,000 வரையிலான சம்பளத்தில் பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த பணிக்கு 10ம் வகுப்பு முடித்தவர்கள் முதல் பிஎட், எம்பிபிஎஸ் படித்தவர்கள் வரை விண்ணப்பம் செய்யலாம்.

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் சார்பில் சைனிக் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டம் அமராவதி நகரில் சைனிக் பள்ளி அமைந்துள்ளது.

Tirupur Amaravathi Nagar Sainik School recruitment 2024 for Lab Assistant and Lower Division Clerk salary upto 45K

இந்த சைனிக் பள்ளியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது. அதன் விபரங்கள் வருமாறு:

காலியிடங்கள்: டிஜிடி - ஆங்கிலம், லேப் அசிஸ்டென்ட் (இயற்பியல்), பேண்ட் மாஸ்டர், ஆர்ட் மாஸ்டர், மெடிக்கல் ஆபிசர் (Part Time), லோவர் டிவிஷன் கிளர்க், Quarter Master பணிக்கு தலா ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதுதவிர வார்ட் பாய்ஸ் (Ward Boys) பணிக்கு 3 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

கல்வி தகுதி: டிஜிடி ஆங்கில் (TGT - English) பணிக்கு ஆங்கிலத்தில் டிகிரி முடித்து பிஎட் படித்திருக்க வேண்டும். சிடிஇடி/டெட் தேர்வு பெற்றிருக்க வேண்டும். லேப் அசிஸ்டென்ட் (இயற்பியல்) பணிக்கு 12ம் வகுப்பை இயற்பியல் பாடத்தை ஒன்றாக படித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். பேண்ட் மாஸ்டர் பணிக்கு பேண்ட் மாஸ்டர், பேண்ட் மேஜர், டிரம் மேஜர் கோர்ஸை முடித்திருக்க வேண்டும். ஆர்ட் மாஸ்டர் பணிக்கு Fine Art (with painting specialization) பிரிவில் மாஸ்டர் டிகிரி, அல்லது ஃபைன் ஆர்ட், ஆர்ட், டிராயிங் மற்றும் பெயிண்டிங் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

மெடிக்கல் ஆபிசர் (Part time) பணிக்கு எம்பிபிஎஸ் முடித்திருக்க வேண்டும். லோவர் டிவிஷன் கிளர்க்கு பணிக்கு 10ம்வகுப்ப மடித்து நிமிடத்துக்கு 40 வார்த்தைகள் டைப் செய்ய தெரிந்திருக்க வேண்டும். வார்ட் பாய்ஸ் பணிக்கு 10ம் வகுப்பு முடித்து ஆங்கிலம், தமிழ், இந்தியில் பேச தெரிந்திருக்க வேண்டும். quarter Master பணிக்கு பிஏ, பிகாம் முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: டிஜிடி - ஆங்கிலம், ஆர்ட் மாஸ்டர், பணிக்கு 21 முதல் 35 வயதக்குள்ளும் லேப் அசிஸ்டென்ட் (இயற்பியல்) பணிக்கு 18 வயது முதல் 35 வயதுக்குள்ளும், பேண்ட் மாஸ்டர், மெடிக்கல் ஆபிசர் (Part Time), லோவர் டிவிஷன் கிளர்க், Quarter Master, வார்ட் பாய்ஸ் (Ward Boys) பணிக்கு 21 வயது முதல் 50 வயதுக்குள் இருக்க வேண்டும். விண்ணப்பத்தாரர்களின் வயது என்பது 2024 ஜனவரி 1ம் தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும்.

மாத சம்பளம்: டிஜிடி - ஆங்கிலம் பணிக்கு மாதம் ரூ.40 ஆயிரம், லேப் அசிஸ்டென்ட் (இயற்பியல்), ஆர்ட் மாஸ்டர், லோவர் டிவிஷன் கிளர்க் பணிக்கு ரூ.25 ஆயிரம், வார்ட் பாய்ஸ் பணிக்கு ரூ.22 ஆயிரம், Quarter Master பணிக்கு ரூ.29,200 + டிஏ வழங்கப்படும். மெடிக்கல் ஆபிசர் (Part time) பணிக்க மாதம் ரூ.45 ஆயிரம் வரை வழங்கப்படும்.

விண்ணப்பிப்பது எப்படி: தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் www.sainikschoolamaravahinagar.edu.in எனும் இணையதளத்தில் விண்ணப்பம் டவுன்லோட் செய்து பூர்த்தியிட்டு உரிய ஆவணங்களின் நகல்களை இணைத்து ‛‛Principal, Sainik School, Amaravathinagar, Pin - 642 102, Udumalpet Taluk, Tiruppur District என்ற முகவரிக்கு ஏப்ரல் 30ம் தேதிக்குள் கிடைக்கும்படி அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்ப கட்டணமாக ரூ.500 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி பிரிவினர் என்றால் ரூ.300 செலுத்த வேண்டும். இப்படி பணிக்கு விண்ணப்பம் செய்வோர் எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+