கூட்டுறவு சங்கங்களில் வேலை! தமிழ்நாடு முழுவதும் 2 ஆயிரம் பணியிடம்.. தேதி முடிய போகுது! மறந்துடாதீங்க
சென்னை: தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்கங்களில் கிளர்க், உதவியாளர் உள்ளிட்ட காலியாக உள்ள 2,257 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நாளையுடன் முடிகிறது. இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் மறக்காமல் விண்ணப்பித்து விடுங்கள்.
தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள கிளர்க், உதவியாளர், சூப்பர்வைசர், காசாளர், ஜூனியர் உதவியாளர் ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. மாநிலம் முழுவதும் உள்ள 38 மாவட்டங்களிலும் சேர்த்து மொத்தம் 2,257 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இந்த பணிகளுக்கான கல்வி தகுதி, வயது, சம்பளம் உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

காலிப்பணியிடங்கள் விவரம்: அரியலூர் கூட்டுறவு கடன் சங்கம் (28 பணியிடங்கள்) செங்கல்பட்டு ( 73), கோவை ( 110) சென்னை( 132), திண்டுக்கல் ( 67), ஈரோடு (73) காஞ்சிபுரம் ( 43) கள்ளக்குறிச்சி (35), கன்னியாகுமரி (35) கரூர்( 37), கிருஷ்ணகிரி (58) மயிலாடுதுறை ( 26) நாகப்பட்டினம் ( 08), நீலகிரி ( 88), ராம்நாடு (112) சேலம் (140) சிவகங்கை ( 28) திருப்பத்தூர்(48),
திருவாரூர் ( 75) தூத்துக்குடி( 65), திருநெல்வேலி ( 65), திருப்பூர் ( 81) திருவள்ளூர்(74) திருச்சி ( 99), ராணிப்பேட்டை ( 33), தஞ்சாவூர் ( 90), திருவண்ணாமலை ( 76), கடலூர் (75), பெரம்பலூர் (10), வேலூர் (40), விருதுநகர்( 45), தருமபுரி( 28), மதுரை (75), நாமக்கல் ( 77), புதுக்கோட்டை( 60), தென்காசி ( 41) தேனி ( 48), விழுப்புரம் (47) என மொத்தம் 38 மாவட்டங்களில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் 2257காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கல்வி தகுதி: கூட்டுறவு நிறுவனங்களில் உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் கூட்டுறவு பயிற்சி முடித்து இருக்க வேண்டும். ராணுவத்தில் பணி புரிந்தவர்கள், ராணுவத்தால் வழங்கப்படும் பட்டப்படிப்பு முடித்து இருந்தால் விண்ணப்பிக்கலாம்.
கூட்டுறவு பயிற்சியை பொறுத்தவரை தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தால் நடத்தப்படும் கூட்டுறவு மேலாண்மை நிலையங்களில் வழங்கப்படும் கூட்டுறவு பயிற்சி, சென்னை நடேசன் கூட்டுறவு மேலாண்மை நிலையம் மற்றும் மதுரை கூட்டுறவு மேலாண்மை நிலையம் மூலம் நடத்தப்படும் உயர் மேலாண்மை பயிற்சி (Higher Diploma in Cooperative Management) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இது குறித்த விரிவான விவரங்கள் தேர்வு அறிவிப்பில் இடம் பெற்றுள்ளன. அதில் விண்ணப்பதாரர்கள் படித்து தெரிந்து கொள்ளலாம
வயது வரம்பு: 18 வயது பூர்த்தியானவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இதர வகுப்பினர் (OC) அதிகபட்ச வயது வரம்பு 32. ஆதிதிராவிடர், அருந்ததியர், பழங்குடியினர். மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் / சீர்மரபினர், பிற்படுத்தப்பட்ட வருப்பினர். பிற்படுத்தப்பட்ட வகுப்பிரை (முஸ்லிம்) மற்றும் இவ்வகுப்புகளைச் சார்ந்த முன்னாள் இராணுவத்தினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு அதிகபட்ச வயது வரம்பு கிடையாது.
விண்ணப்பிப்பது எப்படி? தகுதியும் ஆர்வமும் கொண்ட விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணமாக ரூ. 500 செலுத்த வேண்டும். அரசு விதிகளின் படி விண்ணப்ப கட்டணத்தில் சலுகையும் உண்டு. அதாவது, ஆதி திராவிடர், பழங்குடியினர் அனைத்து பிரிவினரையும் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் அனைத்து பிரிவையும் சேர்ந்த ஆதரவற்ற விதவைகள் ஆகியோருக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.250 ஆகும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: விண்ணப்பிக்க கடைசி நாள் வரும். 01.12.2023 ஆகும். எழுத்து தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்து தேர்வு 24.12.2023 அன்று நடைபெறும். எழுத்து தேர்வு விண்ணப்பிக்கும் போது குறிப்பிடும் மாவட்டத்தில் நடைபெறும்.
எழுத்து தேர்வில் தகுதி பெறுபவர்கள் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். விண்ணப்பிப்பது தொடர்பான சந்தேகங்கள் இருந்தால் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தின் 044-24616503 (சென்னை மாவட்டம்) என்ற உதவி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். அல்லது [email protected] என்ற இமெயிலில் தொடர்பு கொள்ளலாம்.
இதுபோல மாவட்ட வாரியாக உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. சென்னை மாவட்ட தேர்வு அறிவிப்பை படிக்க https://cooperativercs.s3.ap-south-1.amazonaws.com/Notification/32_Notification_1.pdf இந்த கிளிக் செய்யவும். தேர்வுக்கு விண்ணப்பிக்க இந்த லிங்கை https://www.drbchn.in/ கிளிக் செய்யவும்.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications