ரூ.58100 வரை சம்பளம்.. 8ம் வகுப்பு படித்திருந்தால் போதும்.. சென்னையில் அரசு அலுவலகத்தில் வேலை
சென்னை: 8ம் வகுப்பு படித்தவர்கள், சென்னை குற்ற வழக்கு தொடர்வுத்துறை இயக்குநர் (Directorate of Prosecution) அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் (Office Assistant)) பணிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 05.01.2024 மாலை 5.45 மணிக்குள் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
அரசு வேலையில் சேர வேண்டும் என்ற கனவு பலருக்கும் இருக்கும். ஆனால் பெரிய அளவில் படித்திருக்க மாட்டார்கள். குறைவாக படித்தவர்கள் அரசு வேலையில் சேர கடுமையான போட்டிகள் உள்ளன. எழுத்து தேர்வு, தகுதி தேர்வு, நேர்முகத்தேர்வு என பல முயற்சிகள், நீண்ட காத்திருப்பு என போராடித்தான் அரசு வேலையில் சேர முடிகிறது. இந்நிலையில் 8ம் வகுப்பு படித்திருந்தாலே நல்ல சம்பளத்தில் அரசு வேலையில் சேரமுடியும். அரசு அலுலவக உதவியாளர் பணிக்கு 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது.. எனவே தகுதி உள்ளவர்கள் இந்த பணிகளை தேர்வு செய்து சேரலாம்.

சென்னை குற்ற வழக்கு தொடர்வுத்துறை இயக்குநர் (Directorate of Prosecution) அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் (Office Assistant) பணியிடத்தை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்களை அந்த அலுவலகம் வரவேற்பதாக அறிவித்துள்ளது.
வேலையின் பெயர்: அலுவலக உதவியாளர்
காலியிடம்: ஒன்று
வேலைதரும் நிறுவனம்:சென்னை குற்ற வழக்கு தொடர்வுத்துறை இயக்குநர்
வேலை வகை: அரசு வேலை
சம்பளம் எவ்வளவு: ரூ. 15,700-58,100/- என்ற ஊதிய விகிதத்தில் அரசு நிர்ணயம் செய்யும் படிகளுடன் சம்பளம் வழங்கப்படும்
கல்வி தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும் மற்றும் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டியது அவசியம் ஆகும்.
வயது வரம்பு: 01.07.2023 அன்று விண்ணப்பதாரர் வயது வரம்பு 18 -32 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி மற்றும் பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரைவயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள் ஆவர். பிசி/ எம்பிசி வகுப்பினர் 2 ஆண்டு வரை சலுகை பெற தகுதியுடைவர்கள் ஆவர். தமிழக அரசு விதிமுறைகளின்படி இடஒதுக்கீடு உண்டு.
விண்ணப்பிக்கும் முறை: ஆப்லைன்
விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 05.01.2024 மாலை 5.45 மணி வரை
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்பப்பட வேண்டிய முகவரி: இயக்குநர், குற்ற வழக்கு தொடர்வுத்துறை, நெ.5, காமராஜர் சாலை, சென்னை 600 005 .
அலுவலக உதவியாளர் பணியில் சேர விரும்புவோர் சென்னை மாவட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டியது அவசியம் ஆகும். விண்ணப்ப படிவம் சரியான தகவல்களுடன் முழுமையாக பூர்த்தி செய்யப்பட வேண்டும். குறைபாடு உடைய, முழுமையாக பூர்த்தி செய்யப்படாத மற்றும் தவறான தகவல்களை அளித்துள்ள விண்ணப்பங்கள் ஏற்கப்படாது.
நேர்காணலுக்கு அழைக்கும் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ் மற்றும் இதர அசல் சான்றிதழ்களையும் கொண்டு வர வேண்டும். மேலும் மதிப்பெண் சான்றிதழ், வயது, இனம் மற்றும் இதர சான்றிதழ்களின் நகல்களை (ஒரிஜினல் வேண்டாம்) சுய சான்றொப்பமிட்டு விண்ணப்ப படிவத்துடன் அனுப்ப வேண்டும். இந்த வேலையை பொறுத்தவரை தேவைப்படின் தேர்வர்களுக்கு எழுத்துத் தேர்வும் வைக்கப்படும்.
விண்ணப்பங்கள் அனுப்பப்பட வேண்டிய கடைசி நாளான 05.01.2024 மாலை 05.45 மணிக்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்கப்பட மாட்டாது. விண்ணப்பங்கள் பதிவுத்தபால் மூலம் மட்டுமே அனுப்பப்பட வேண்டும். நேரிலோ அல்லது அலுவலகத்திலோ சமர்ப்பிக்க கூடாது.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications