தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணியாற்ற சூப்பர் வாய்ப்பு.. 2900 பணியிடங்கள்.. 59,900 வரை சம்பளம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக மின்வாரியத்தில் பணியாற்ற சூப்பர் வாய்ப்பு உருவாகி உள்ளது. காலியாக உள்ள 2900 கள உதவியாளா் (பயிற்சி) பணியிடங்களுக்கு, இன்று (பிப்.15-ஆம் தேதி) முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டு தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் 2900 கள உதவியாளா் (பயிற்சி) பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிடும் பொருட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது.

ஆனால் மார்ச் மாதம் வந்த கொரோனா மற்றும் லாக்டவுன் காரணத்தால் நிரப்பப்படவில்லை,. தேதி குறிப்பிடாமல் வேலைக்கு விண்ணப்பிக்கும் முறைகள் ஒத்திவைக்கப்பட்டது. ஓராண்டுக்கு பிறகு தற்போது கள உதவியாளா் (பயிற்சி) பணி நேரடி நியமனத்துக்கான விண்ணப்பங்கள், ஆனலைன் மூலம் பிப்.15 முதல் மார்ச் 16-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

என்ன ஊதியம்

என்ன ஊதியம்

பணி: கள உதவியாளா் (பயிற்சி) (Field Assistant (Trainee))
பணியிடங்கள்: 2900
தகுதி: எலக்ட்ரீஷியன், வயர்மேன், எலக்ட்ரிக்கல் போன்ற ஏதாவதொரு பிரிவில் ஐடிஐ முடித்து தொழில் பழகுநர் பயிற்சி முடித்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பத்தாரர்கள் தமிழ் மொழி குறித்த போதுமான அறிவை பெற்றிருத்தல் அவசியம்.
ஊதியம்: மாதம் ரூ. 18,800 - 59,900

வேலைக்கு தேர்வு மறை

வேலைக்கு தேர்வு மறை

வயதுவரம்பு: எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி மற்றும் ஆதரவற்ற விதவைகள் பிரிவினர் 18 முதல் 35க்குள்ளும், எம்பிசி, பிசி, பிரிவினர் 18 முதல் 32க்குள்ளும், ஏனைய பிரிவைச் சேராத இதர பிரிவினர் 18 முதல் 30க்குள்ளும் இருத்தல் வேண்டும்-உடல் தகுதித்தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்

எவ்வளவு

எவ்வளவு

தேர்வுக் கட்டணம்: பிசி, எம்பிசி பிரிவினர் ரூ.1000, ஆதிதிராவிடர், பழங்குடி பிரிவினர் ரூ.500, அனைத்து பிரிவினைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவற்ற விதவைகள் பிரிவினர் ரூ.500 கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மற்றும் வங்கிகள் சேவை அட்டைகளை பயன்படுத்தி செலுத்த வேண்டும்,.

எப்படி விண்ணப்பிப்பது

எப்படி விண்ணப்பிப்பது

விண்ணப்பிக்கும் முறை: www.tangedco.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். உடல் தகுதி தேர்வு மற்றும் எழுத்து தேர்வு www.tangedco.gov.in என்ற இணையதளததில் அறிவிக்கப்படும் பிப்.15 முதல் மார்ச் 16-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் மேலும் விவரங்களுக்கு இந்த செய்தி உடன் இணைக்கப்பட்டுள்ள பிடிஎப் பைலை பாருங்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+