தமிழக நெடுஞ்சாலை துறையில் வேலை.. மாவட்ட வாரியாக பணியிடங்கள்! 8 ஆம் வகுப்பு தகுதி தான்
சென்னை: தமிழக நெடுஞ்சாலைத் துறையில் காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஓட்டுநர், அலுவலக உதவியாளர், அலுவலக காவலர் உள்பட 80 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. 8 ஆம் வகுப்பு முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். சம்பளத்தை பொறுத்தவரை மாதம் ரூ.72 ஆயிரம் வரை வழங்கப்படும்.
தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்பும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கான அறிவிப்புகளை அந்தந்த துறைகள் வெளியிட்டு வருகின்றன. அதன்படி, தமிழ்நாடு அரசின் நெடுஞ்சாலைத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? கல்வி தகுதி, வயது வரம்பு உள்ளிட்டவற்றை பார்க்கலாம்.

பணியிடங்கள் விவரம்:
ஓட்டுநர், அலுவலக உதவியாளர், அலுவலக காவலர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. மாவட்ட வாரியாக பார்த்தால், கோவை -18, தஞ்சை -31, வேலூர் -05, கடலூர் -09, திருப்பூர் -01, செங்கல்பட்டு -01, தென்காசி -01, திருச்சி -08, தூத்துக்குடி -02, நாகர்கோவில் -05 என மொத்தம் 80 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கல்வி தகுதி:
அலுவலக உதவியாளர், அலுவலக காவலர் பணிக்கு 8 ஆம் வகுப்பு படித்து இருந்தால் போதும். டிரைவர் பணிக்கு இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் சான்று பெற்றிருக்க வேண்டும். ஒதுக்கீடு விவரம் - ஆதி திராவிடர், பழங்குடியினர்.
வயது வரம்பு & சம்பளம்:
01.07.2025 தேதிப்படி 18 வயது முதல் 37 வயதுக்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
* டிரைவர்: ரூ.5,700 - 71,900
* அலுவலக உதவியாளர்: ரூ.15,700 - 58,100
* அலுவலக காவலர்: ரூ.15,700 - 58,100
தேர்வு முறை:
தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். காலிப்பணியிடங்கள் உரிய அரசு விதிமுறைகளின்படி, ஒளிவு மறைவு இன்றி நிரப்பப்படும் என்பதால் இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் நெடுஞ்சாலைத் துறை தெரிவித்துள்ளது. விண்ணப்பங்களை தபால் வழியாக அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
(தூத்துக்குடி மாவட்டத்திற்குரியது) -
கோட்டப் பொறியாளர், நெடுஞ்சாலை (ம)ப,
4ஏ/111, எட்டையபுரம் ரோடு, தூத்துக்குடி - 628002.
அலுவலக தொலைபேசி எண்: 0461-2345800.












Click it and Unblock the Notifications