தமிழ்நாட்டில் ஹெல்த் இன்ஸ்பெக்டர் வேலை.. இன்டர்வியூ இல்லை..1066 பணியிடங்கள்.. சம்பளம்: ரூ.62,000/-
சென்னை: தமிழ்நாடு மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் (MRB) 1066 ஹெல்த் இன்ஸ்பெக்டர் கிரேட் 2 (Health Inspector Grade II) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை இன்று (ஜூலை 11) செய்தித்தாள்களில் வெளியிட்டுள்ளது
TN MRB Health Inspector Grade II வேலைவாய்ப்பு 2023 இல் மொத்தம் 1066 பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் 11.07.2023 முதல் 31.07.2023 க்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

TN MRB மொத்த காலிப்பணியிடங்கள்: 1066
பொது - 330 பணியிடங்கள்
பிசி - 282 பணியிடங்கள்
பிசி (M) - 37 பணியிடங்கள்
எம்பிசி / டிஎன்சி - 215 பணியிடங்கள்
எஸ்சி - 160 பணியிடங்கள்
எஸ்டி - 11 பணியிடங்கள்
TN MRB Health Inspector Grade II வேலைவாய்ப்பு 2023 க்கு வயது வரம்பு என்ன? 01.07.2023 தேதியின் படி, குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 32 க்குள் இருப்பவர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம். பட்டியல் இன பிரிவினர், பிசி, எம்பிசி பிரிவினருக்கு வயது சலுகை உண்டு.இதற்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை பாருங்கள்.
TN MRB Health Inspector Grade II வேலைவாய்ப்பு 2023 க்கு கல்வி தகுதி என்ன?-உயிரியல் அல்லது தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடங்களில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதாவது சயின்ஸ் குரூப் அல்லது பயோ மேக்ஸ் குரூப் எடுத்து பிளஸ் 2 படித்திருக்க வேண்டும்.
10ம் வகுப்பில் கண்டிப்பாக தமிழ் மொழியை ஒரு பாடமாக தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இரண்டு வருட பல்நோக்கு சுகாதார பணியாளர் (ஆண்) படிப்பு / ஹெல்த் இன்ஸ்பெக்டர்/ சானிட்டரி இன்ஸ்பெக்டர் பாடநெறி பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவம் இயக்குநரால் வழங்கப்பட்ட சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
Health Inspector விண்ணப்ப கட்டணம்:
SC/SCA/ST/DAP(PH) விண்ணப்பதாரர்கள் - ரூ.300/-
மற்ற விண்ணப்பதாரர்கள் - ரூ.600/-
TN MRB Health Inspector Grade II பணிக்கு ஊதியம் எவ்வளவு: இந்த பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதிய நிலை 8ன் படி மாதம் ரூ.19500/- முதல் ரூ.62000/- வரை ஊதியம் வழங்கப்படும்
அறிவிப்பு வெளியான நாள் : 11.07.2023
விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.07.2023
TN MRB Health Inspector Grade II வேலைவாய்ப்பு 2023 க்கு எப்படி தேர்வு செய்யப்படுவார்கள்: சுகாதார ஆய்வாளர் கிரேடு-II பதவிக்கு விண்ணப்பதாரர்கள் அவர்களின் கல்வி மற்றும் தொழில்நுட்பத் தகுதிகளில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த பதவிக்கு நேர்காணல் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் https://www.mrb.tn.gov.in/notifications.html என்ற இணையதளத்தில் நேரடியாக வரும் 31.07.2023க்குள் விண்ணப்பிக்க வேண்டும். முழு விவரங்களை செய்தியுடன் இணைக்கப்பட்டுள்ள பிஎடிஎப் ஃபைலை பாருங்கள்.
-
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல் -
மும்பை ரெஸ்டாரண்டில் நடந்த சந்திப்பு.. சமாதானமான ஸ்மிருதி மந்தனா குடும்பம்.. மீண்டும் திருமணம்?












Click it and Unblock the Notifications