மிஸ் பண்ணாதீங்க.. மாதம் ரூ.71,900 வரை சம்பளம்! தமிழகத்திலேயே அரசு வேலை.. அழைக்கும் TNMRB.. ரெடியா?
சென்னை: தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் மாதம் ரூ.19,500 முதல் ரூ.71,900 வரையிலான சம்பளத்தில் இஇஜி டெக்னீசியன் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
தமிழ்நாடு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு டிஎன்எம்ஆர்பி எனும் தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம்(TNMRB or Tamil Nadu Medical Recruitment Board) சார்பில் ஆட்சேர்ப்பு நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தான் தற்போது பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்புகள் தனித்தனியே வெளியாகி உள்ளன. அதன் விபரம் வருமாறு:
காலியிடங்கள்: இஇஜி டெக்னீசியன் (EEG Technician) பணிக்கு 10 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இடஒதுக்கீடு வாரியாக பார்த்தால் பொதுப்பிரிவை சேர்ந்த 2 பேர், பிசி பிரிவை சேர்ந்த 3 பேர் பிசி(எம்) பிரிவை சேர்ந்த ஒருவர், எம்பிசி/டிஎன்சி பிரிவினர் 2 பேர், எஸ்சி பிரிவினர் 2 பேர் என மொத்தம் 10 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
வயது வரம்பு: பணிக்கு விண்ணப்பம் செய்வோர் பொதுப்பிரிவினராக இருந்தால் குறைந்தபட்சம் 18 வயதும் அதிகபட்சம் என்றால் 32 வயதுக்குள் இருக்க வேண்டும். பொதுப்பிரிவு மாற்றுத்திறனாளிகள் என்றால் 42 வயது வரையும், பொதுப்பிரிவு முன்னாள் படை வீரர் என்றால் 50 வயது வரையும் இருக்கலாம். எஸ்சி, எஸ்டி, எஸ்சிஏ, பிசி, பிசிஎம், எம்பிசி, டிஎன்சி பிரிவினர் என்றால் வயது வயது வரம்பு என்பது இல்லை.
மாதசம்பளம்: இந்த பணிக்கு மாதம் குறைந்தபட்சமாக ரூ.19,500 வழங்கப்பட உள்ளது. அதிகபட்சமாக ரூ.71,900 வரை வழங்கப்பட உள்ளது என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பணிக்கு விண்ணப்ப கட்டணமாக ரூ.600 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்சி, எஸ்டி, டிஏபி(பிஎச்), கைம்பெண்களுக்கு கட்டணம் ரூ.300 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி: தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் www.mrb.tn.gov.in இணையதளம் மூலம் டிசம்பர் 18 ம் தேதி விண்ணப்பம் செய்ய வேண்டும். இப்படி விண்ணப்பிப்போர் மெரிட் லிஸ்ட் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பணியில் சேர்த்து கொள்ளப்படுவார்கள்.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here
-
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
இடி, மின்னலுடன் கொட்டப்போகும் மழை.. அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
சென்னையின் தலையெழுத்தை மாற்றும் ப்ராஜெக்ட்.. ரெடியாகும் 'ரூட் மேப்'... எகிறப்போகும் வேகம்! -
ஆமா.. தமிழக சட்டசபை தொகுதிகள் 234 தான் என நிர்ணயிக்கப்பட்டது எப்படி? ஏன் 300 இல்லை? சுவாரசியம் -
சென்னை சாலைகளில்.. களமிறக்கப்படும் 'இன்ஃப்ராரெட்' அஸ்திரம்.. வெளியே போறீங்களா? இதை நோட் பண்ணுங்க -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
பில் கேட்ஸ் செய்த சதி? தமிழகத்தில் கொட்டிய ஆலங்கட்டி மழைக்கு இதுதான் காரணமா! வெதர்மேன் பரபர விளக்கம் -
IT JOBS: அனுபவம் வேண்டாம்.. டிகிரி இருந்தாலே போதும்.. Accenture-ல் குவிந்திருக்கும் வேலைவாய்ப்பு -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர்












Click it and Unblock the Notifications