12ம் வகுப்பு போதும்! மாதஊதியம் ரூ.19,500 டூ ரூ.62,000.. அசத்தலான அரசு வேலை! அழைக்கும் டிஎன்எம்ஆர்பி
சென்னை: தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தில் காலியாக உள்ள இசிஜி டெக்னீசியன் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சமாக ரூ.19,500ம், அதிகபட்சமாக ரூ.62 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
தமிழ்நாடு அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு டிஎன்எம்ஆர்பி எனும் தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம்(TNMRB or Tamil Nadu Medical Recruitment Board) சார்பில் ஆட்சேர்ப்பு நடத்தப்பட்டு வருகிறது.

சென்னை தேனாம்பேட்டை அண்ணா சாலையில் டிஎன்எம்ஆர்பி அலுவலகம் அமைந்துள்ளது. இந்நிலையில் தான் தற்போது காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு:
தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் சுகாதாரத்துறையில் காலியாக உள்ள இசிஜி டெக்னிசியன் பணிக்கு 95 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். பிரிவு வாரியாக பார்த்தால் ஜிடி பிரிவை சேர்ந்த 29 பேர், பிசி பிரிவை சேர்ந்த 24 பேர், பிசி(எம்) பிரிவை சேர்ந்த 4 பேர், எம்பிசி/டிஎன்சி பிரிவை சேர்ந்த 20 பேர், எஸ்சி பிரிவை சேர்ந்த 14 பேர், எஸ்சி(ஏ) பிரிவை சேர்ந்த 3 பேர், எஸ்டி பிரிவை சேர்ந்த ஒருவர் என மொத்தம் 95 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்புவோர் குறைந்தபட்சம் 18 வயதை நிறைவு செய்திருக்க வேண்டும். அதிகபட்சமாக 32 வயதுக்குள் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் என்றால் 42 வயது வரையும், முன்னாள் படை வீரர்கள் என்றால் 50 வயது வரையும் தளர்வு அளிக்கப்படுகிறது. கணவரை இழந்த பெண்கள் என்றால் 59 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். வயது வரம்பு என்பது 01.07.2023 என்ற தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும்.

இசிஜி டெக்னிசியன் மற்றும் லேப் டெக்னிசியன் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 12ம் வகுப்பு முடித்து ஓராண்டு சான்றிதழ் படிப்பை எலக்ட்ரோ கார்டியோகிராம் அல்லது டிரட்மில் டெக்னீசியன் பிரிவில் முடித்திருக்க வேண்டும்.
இசிஜி டெக்னிசியன் பணிக்கு மாதம் குறைந்தபட்சமாக ரூ.19,500ம், அதிகபட்சமாக ரூ.62,000 வரையும் வழங்கப்படும். பணிக்கான விண்ணப்ப கட்டணமாக ரூ.600 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி, டிஏபி(பிஎச்) பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.300 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் https://www.mrb.tn.gov.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் ஆகஸ்ட் மாதம் 21ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதன்மூலம் எழுத்து தேர்வு, நேர்க்காணல் இல்லை என்பது உறுதியாகி உள்ளது.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications