Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரெடியா? நோ எக்ஸாம்.. நேர்க்காணலும் இல்லை! மாதஊதியம் ரூ.18,000 டூ ரூ.56,900 வரை! டிஎன்எம்ஆர்பி வேலை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தில் காலியாக உள்ள Therapeutic Assistant பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சமாக ரூ.18 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ56,900 வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

தமிழ்நாடு அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு டிஎன்எம்ஆர்பி எனும் தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம்(Tamil Nadu Medical Recruitment Board or TNMRB) சார்பில் ஆட்சேர்ப்பு நடத்தப்பட்டு வருகிறது.

 TN MRB recruitment 2023 for Therapeutic assistant jobs

டிஎன்எம்ஆர்பி அலுவலகம் என்பது சென்னை தேனாம்பேட்டை அண்ணா சாலையில் அமைந்துள்ளது. இந்நிலையில் தான் தற்போது காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு:

தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் சுகாதாரத்துறையில் காலியாக உள்ள Therapeutic Assistant பணியிடங்களுக்கு மொத்தம் 67 நிரப்பப்பட உள்ளது. இதற்கு ஆண், பெண்கள் என இருவரும் விண்ணப்பம் செய்யலாம். அதன்படி Therapeutic Assistant பணியிடங்களுக்கு 36 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதேபோல் Therapeutic Assistant பணிக்கு 31 பெண்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்புவோர் குறைந்தபட்சம் 18 வயதை நிறைவு செய்திருக்க வேண்டும். அதிகபட்சமாக 32 வயதுக்குள் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் என்றால் 42 வயது வரையும், முன்னாள் படை வீரர்கள் என்றால் 50 வயது வரையும் தளர்வு அளிக்கப்படுகிறது. கணவரை இழந்த பெண்கள் என்றால் வயது வரம்பு எதுவும் இல்லை. வயது வரம்பு என்பது 01.07.2023 என்ற தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும்.

விண்ணப்பம் செய்வோர் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநரகம், தமிழ்நாடு அரசு அல்லது செயலாளரால் வழங்கப்பட்ட நர்சிங் தெரபியில் இரண்டரை ஆண்டு டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும். பணிக்கான விண்ணப்ப கட்டணமாக ரூ.600 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி, டிஏபி(பிஎச்) பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.300 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சமாக ரூ.18 ஆயிரம் சம்பளமாக வழங்கப்படும். அதிகபட்சம் என்றால் ரூ.56,900 வரை சம்பளம் கிடைக்கும். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் https://www.mrb.tn.gov.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் ஜூலை மாதம் 10ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும்.

இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதன்மூலம் எழுத்து தேர்வு, நேர்க்காணல் இல்லை என்பது உறுதியாகி உள்ளது. மேலும் சந்தேகங்கள் 98405 86582 என்ற எண்ணை வாரத்தில் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையும், சனிக்கிழமைகளில் காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை அழைத்து தீர்த்து கொள்ளலாம்.

பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண

பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+