செம.. மாதஊதியம் ரூ.13,000 டூ ரூ.1.12 லட்சம்! டிஎன்எம்ஆர்பி-யில் அசத்தலான வேலை! தமிழகத்திலேயே பணி
சென்னை: தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தில் 2 பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சம் ரூ.13 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.1.12 லட்சம் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
தமிழ்நாடு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு டிஎன்எம்ஆர்பி எனும் தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம்(TNMRB or Tamil Nadu Medical Recruitment Board) சார்பில் ஆட்சேர்ப்பு நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தான் தற்போது புதிய காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு:
காலியிடங்கள்: தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் சுகாதாரத்துறையில் காலியாக டெக்னிசியன் பணிக்கு 3 பேர், லேப் டெக்னிசியன் பணிக்கு 18 பேர் என மொத்தம் 21 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். டெக்னிசியன் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் டிப்ளமோ பார்மஸி படிப்பை முடித்திருக்க வேண்டும். லேப் டெக்னிசியன் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 12ம் வகுப்பு படிப்போடு ஓராண்டுக்கான மெடிக்கல் லேபாரட்டரி டெக்னாலஜி படிப்பை முடித்திருக்க வேண்டும்.
மாதசம்பளம்: டெக்னிசியன் பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு மாதம் குறைந்தபட்சம் ரூ.35,400ம் அதிகபட்சமாக ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்து 400ம் சம்பளமாக வழங்கப்படும். இசிஜி டெக்னிசியன் பணிக்கு மாதம் குறைந்தபட்சமாக ரூ.19,500ம், அதிகபட்சமாக ரூ.62 ஆயிரம் வரையும் வழங்கப்படும். லேப் டெக்னிசியன் பணிக்கு மாதம் முதல் 2 ஆண்டு ரூ.13 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும். அதன்பிறகு ரூ.19,500 சம்பளமா உயர்த்தி வழங்கப்படுவதோடு அதிகபட்சமாக ரூ.62 ஆயிரம் வரை சம்பளம் பெற முடியும்.
வயது வரம்பு: டெக்னிசியன் விண்ணப்பம் செய்ய விரும்புவோர் குறைந்தபட்சம் 18 வயதை நிறைவு செய்திருக்க வேண்டும். அதிகபட்சமாக 32 வயதுக்குள் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் என்றால் 42 வயது வரையும், முன்னாள் படை வீரர்கள் என்றால் 50 வயது வரையும் தளர்வு அளிக்கப்படுகிறது. எஸ்சி, எஸ்டி, எஸ்சிஏ, எம்பிசி, டிஎன்சி, பிசிஎம், பிசி, கணவரை இழந்த பெண்கள் என்றால் வயது வரம்பு எதுவும் இல்லை. லேப் டெக்னிசியன் பணிக்கு 60 வயதுக்குள் இருக்க வேண்டும். விண்ணப்பத்தாரர்களின் வயது வரம்பு என்பது 01.07.2023 என்ற தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும்.
கட்டணம்: டெக்னிசியன் பணிக்கு விண்ணப்ப கட்டணமாக ரூ.600 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி, டிஏபி(பிஎச்) பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.300 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் லேப் டெக்னிசியன் பணிக்கு விண்ணப்ப கட்டணமாக ரூ.300 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கடைசி தேதி: தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் https://www.mrb.tn.gov.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் ஆகஸ்ட் மாதம் 21ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெக்னிசியன் பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
லேப் டெக்னிசியன் பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
டெக்னிசியன் பணிக்கு விண்ணப்பம் செய்ய Click Here
லேப் டெக்னிசியன் பணிக்கு விண்ணப்பம் செய்ய Click Here
-
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இடி, மின்னலுடன் கனமழை.. ஆரஞ்சு அலர்ட் கொடுத்த வானிலை மையம்! மக்களே உஷார் -
தங்கம் ரூ.3000, வெள்ளி ரூ.14000 சரிவு.. மீண்டும் பல்டி அடித்தால் மக்கள் கொண்டாட்டம்..! -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
இன்று முதல் புதிய வருமான வரி விதிகள் அமல்! சம்பளதாரர்கள் கவனிக்க வேண்டிய 'டாப் 10' மாற்றங்கள்! -
BJP Candidate List: தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? இன்று வெளியீடு! அண்ணாமலை பெயர் இருக்காதா? -
அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..டபுள் ஆன ஊதியம்! அதிரடியாக வெளியான ஆர்டர்! யார் யாருக்கு? எவ்வளவு? -
கிளாம்பாக்கம் - மகேந்திரா வேர்ல்ட் சிட்டி.. சென்னையின் மிகப்பெரிய ப்ராஜெக்ட்.. எல்லாமே மாறப்போகுது -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. 0.9 கி.மீ உயரத்தில் நடந்த வானிலை மாற்றம்! சம்பவம் இருக்கு -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்!











Click it and Unblock the Notifications