ரூ.1.14 லட்சம் வரை மாத சம்பளம்.. தமிழக மருத்துவ தேர்வு வாரியம் தரும் சூப்பர் சான்ஸ்! மிஸ் பண்ணாதீங்க
சென்னை: தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் பிசியோதெரபிஸ்ட் கிரேட் II பணிக்கான காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சமாக ரூ.36,200 முதல் அதிகபட்சமாக ரூ.1,14,800 வரையிலான சம்பளம் என்பது வழங்கப்பட உள்ளது.
தமிழ்நாடு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு டிஎன்எம்ஆர்பி எனும் தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம்(TNMRB or Tamil Nadu Medical Recruitment Board) சார்பில் ஆட்சேர்ப்பு நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தான் புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளன. அதன் விபரம் வருமாறு: தற்போதைய அறிவிப்பின்படி பிசியோதெரபிஸ்ட் கிரேட் - II (Physiotherapist Grade - II) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. மொத்தம் 47 பேர் சேர்க்கப்பட உள்ளனர்.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் பிசியோதெரபிஸ்ட் இளநிலை படிப்பை முடித்திருக்க வேண்டும். விண்ணப்பம் செய்வோர் 32 வயதுக்குள் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் என்றால் 10 வயது வரையும், எஸ்சி, எஸ் (ஏ), எஸ்சி, எம்பிசி டிசி, பிசி, பிசிஎம் மற்றும் இந்த பிரிவுகளை சேர்ந்த முன்னாள் படை வீரர்கள் என்றால் அதிகபட்சமாக 59 வயதுக்குள் இருக்கலாம்.
இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு லெவல் 15 என்ற அடிப்படையில் மாதசம்பளம் வழங்கப்பட உள்ளது. அதன்படி பார்த்தால் குறைந்தபட்சமாக மாதம் ரூ.36,200 முதல் அதிகபட்சமாக ரூ.1,14,800 வரை மாத சம்பளம் என்பது வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணிக்கான அறிவிப்பு என்பது கடந்த 18 ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் நவம்பர் 7 ம் தேதிக்குள் www.mrb.tn.gov.in எனும் இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்ப கட்டணணமாக ரூ.1000 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி டிஏபி (பிஎச்) என்றால் விண்ணப்ப கட்டணம் ரூ.500 ஆக உள்ளது.
விண்ணப்பம் செய்வோர் தமிழ் மொழிக்கான தகுதி தேர்வு மற்றும் கம்ப்யூட்டர் அடிப்படையில் எழுத்து தேர்வு உள்ளிட்டவற்றின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். தேர்வு மையங்களாக சென்னை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி , கோவை உள்ளன.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications