ஹெல்த் இன்ஸ்பெக்டர் ஆக ஆசையா? 1,429 பணியிடங்கள்.. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு! மிஸ் பண்ணிடாதீங்க
சென்னை: தமிழக அரசின் மருத்துவத்துறை முக்கியமான வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஹெல்த் இன்ஸ்பெக்டர் எனப்படும் சுகாதார ஆய்வாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 1,429 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. தேர்வு செய்யப்படும் தேர்வர்களுக்கு மாதம் 71 ஆயிரம் ரூபாய் சம்பளம் கிடைக்கும். இது குறித்த விவரங்களை இங்கே காணலாம்.
தமிழக மருத்துவத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை மருத்துவ பணியாளர் தேர்வு ஆணையம் நிரப்பி வருகிறது. அந்த வகையில், தற்போது மருத்துவத்துறையின் கீழ் செயல்படும் சுகாதார ஆய்வாளர் (கிரேடு-2) பதவிக்கு விண்ணப்பங்கள் பெறப்படத் தொடங்கியுள்ளது. இதற்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? கல்வித் தகுதி என்ன? என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.

பணியிடங்கள் விவரம்:
சுகாதார ஆய்வாளர் (ஹெல்த் இன்ஸ்பெக்டர்) - 1,429 காலிப்பணியிடங்கள்.
கல்வித் தகுதி:
இந்த பதவிக்கான கல்வித் தகுதியைப் பார்த்தால், விண்ணப்பதாரர்கள் 12ஆம் வகுப்பில் உயிரியல், தாவரவியல், விலங்கியல் ஆகிய பாடப்பிரிவுகளில் ஒன்றை எடுத்து படித்திருக்க வேண்டும்.
10ஆம் வகுப்பு வரை தமிழை ஒரு பாடமாக கட்டாயம் படித்திருக்க வேண்டும். இரண்டு ஆண்டுகள் கொண்ட சுகாதார பணியாளர் (MPHW) படிப்பு முடித்திருக்க வேண்டும். அல்லது, பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவ இயக்குநரால் வழங்கப்பட்ட இன்ஸ்பெக்டர் (HI)/ சுகாதார ஆய்வாளர் (SI) சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். கல்வித் தகுதி பற்றிய முழு விவரங்களை தேர்வு அறிவிப்பில் தேர்வர்கள் உறுதிசெய்து கொள்ளவும்.
சம்பளம் எவ்வளவு:
சுகாதார ஆய்வாளர் (கிரேடு-2) பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பே ஸ்கேல் 8 படி சம்பளம் வழங்கப்படும். அதாவது, மாதம் ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும்.
வயது வரம்பு
குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியானவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது உச்ச வரம்பு இல்லை. அதாவது, 60 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
தேர்வு முறை:
எழுத்துத் தேர்வு மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு கணினி வழியில் நடைபெறும். மொத்தம் 3 மணி நேரம் தேர்வு நடைபெறும். தமிழ் தகுதி தேர்வும் உண்டு. தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். தமிழ் தகுதி தேர்வு 50 மதிப்பெண்களுக்கு நடைபெறும்; காலம் - 1 மணி நேரம். கணினி வழியிலான கொள்குறி (objective) வகை தேர்வு 2 மணி நேரத்திற்கு நடைபெறும்.
விண்ணப்பக் கட்டணம்:
விண்ணப்பிக்க தொடங்கிய தேதி: 27.10.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 16.11.2025
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் https://www.mrb.tn.gov.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். தேர்வு அறிவிப்பை முழுமையாகப் படித்து உறுதிசெய்த பிறகு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தேர்வு அறிவிப்பைப் படிக்க: https://www.mrb.tn.gov.in/notifications.html












Click it and Unblock the Notifications