முதுநிலை ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிப்போர் கவனத்திற்கு..தேர்வு வாரியத்தின் அட்டகாசமான அறிவிப்பு இதோ!
சென்னை: தமிழ்நாடு உயர்கல்வி துறையில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு கடந்த மாதம் வெளியானது. இதற்குக் கடைசி தேதி அக்டோபர் 17 என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கடைசி தேதி வரும் அக். 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 2,207 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர் நிலை 1 உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு கடந்த மாதம் வெளியானது.
கொரோனா காலத்திற்குப் பிறகு நடைபெறும் தேர்வு என்பதால் இதற்குப் பலரும் விண்ணப்பித்து வருகின்றனர்.

ஆசிரியர் தேர்வாணையம்
http://trb.tn.nic.in/ என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பிக்க வேண்டும். கடந்த மாதம் 15ஆம் தேதி முதல் அக்டோபர் 17ஆம் தேதி வரை இதற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தச் சூழலில் இதற்கான கடைசி தேதி வரும் அக்டோபர் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஆசிரியர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2020-21ஆம் கல்வி ஆண்டிற்கான முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை - 1 மற்றும் கணினி பயிற்றுநர் நிலை - 1 ஆகிய காலிப்பணியிடங்களுக்கு போட்டித்தேர்வு மூலம் நேரடி நியமனம் செய்வதற்கு அறிவிக்கை எண்.01/2021 நாள் 09.09.2021 முதல் வெளியிடப்பட்டு, விண்ணப்பங்கள் இணைய வழி வாயிலாக 18.09.2021 முதல் பெறப்பட்டு வருகின்றன.

கடைசி தேதி நீட்டிப்பு
இந்நிலையில் அரசாணை எண். 82, நாள் 16.08.2021ன்படி தமிழ் வழி பயின்றோருக்கான சான்றிதழ் (PSTM) சார்ந்து மென்பொருளில் மாற்றம் செய்ய வேண்டியுள்ளதாலும் மேலும் பல்வேறு விண்ணப்பதாரர்களின் வேண்டுகோளுக்கிணங்கவும் முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை - 1 மற்றும் கணினி பயிற்றுநர் நிலை - 1 ஆகிய பணியிடங்களுக்கு இணையவழி வாயிலாக விண்ணப்பங்கள் பெறுவதற்கான கடைசி தேதி 17.10.2021லிருந்து 31.10.2021 மாலை 5.00 மணி வரை நீட்டிக்கப்படுகிறது" என அறிவிக்கப்படுகிறது.

காலியிடங்கள்
இதில் மொத்த காலியிடங்கள் Post Graduate Assistants / Physical Education Directors Grade - I, Computer instructor Grade-1 காலியிடங்கள்: 2207 ஆகும். பாட வாரியாக காலிப்பணியிடங்கள் விவரம்:
1. தமிழ் - 271
2. ஆங்கிலம் -192
3. கணிதவியல் -114
4. இயற்பியல் - 97
5. வேதியியல் - 191
6. விலங்கியல் -109
7. தாவரவியல் - 92
8. பொருளாதாரவியல் - 289
9. வணிகவியல் - 313
10. வரலாறு - 115
11. புவியியல் - 12
12. அரசியல் அறிவியல் - 14
13. வீட்டு அறிவியல் - 03
14. இந்திய கலாசாரம் - 03
15. உயிர் வேதியியல் - 01,
16. உடற்கல்வி இயக்குநர் (நிலை- 1) - 39
15. கணினி பயிற்றுவிப்பாளர் (நிலை-1) - 44.

5 ஆண்டுகள் தளர்வு
40 வயதிற்குள் இருப்பவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். அதேநேரம் தமிழ்நாடு அரசின் விதிமுறைகள் படி சில குறிப்பிட்ட பிரிவினருக்குக் கூடுதலாக ஐந்து ஆண்டுகள் தளர்வு வழங்கப்பட்டுள்ளது. 50 சதவிகித மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம் மற்றும் பி.எட் முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். சம்மந்தப்பட்ட பிரிவில் முதுகலைப் பட்டத்துடன் பி.எட் முடித்திருக்க வேண்டும். www.trb.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications