தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் சூப்பர் அறிவிப்பு.. 1598 சிறப்பு ஆசிரியர் பணிகள்.. முழு விவரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 1598 சிறப்பு ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் மார்ச் 31ம் தேதி முதல் ஏப்ரல் 25ம் தேதிக்குள் trb.tn.nic.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

தமிழகத்தில் காலியாக உள்ள சிறப்பு ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பினை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) நேற்று தனது அதிகாரப்பூர்வ இணையதளமான trb.tn.nic.in இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

கைவினை பயிற்றுவிப்பாளர் (தையல்), ஓவிய ஆசிரியர் இசை ஆசிரியர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் உள்ளிட்ட பணிகளுக்கு 1,598 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. விருப்பம் உள்ளவர் trb.tn.nic.in இல் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பம்

விண்ணப்பம்

TN TRB சிறப்பு ஆசிரியர் ஆட்சேர்ப்பு 2021 க்கான ஆன்லைனில் விண்ணப்பிக்கும் செயல்முறை மார்ச் 31 அன்று தொடங்கும். தகுதியானவர்கள் 2021 ஏப்ரல் 25 க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

எழுத்து தேர்வு ஏப்ரல் 28ம் தேதி நடைபெறும்.

ஆசிரியர் பணியிடங்கள்

உடற்கல்வி ஆசிரியர் பணிக்கு மொத்தம் 801 காலி பணியிடங்கள் உள்ளன. இதேபோல் இசை ஆசிரியர் பணிக்கு 91 காலியிடங்கள் உள்ளன. கைவினை பயிற்றுவிப்பாளர் (தையல்) பணிக்கு மொத்தம் 365 பணியிடங்கள் உள்ளன. கலை மாஸ்டர் பணிக்கு 341 காலியிடங்கள் உள்ளன. இதில் சாதி வாரியாக இடஒதுக்கீடு ஒவ்வொரு பணிக்கும் உள்ளது. பொது, பிசி, எம்பிசி, எஸ்டி, எஸ்சி, தமிழ்வழியில் படித்தவர்கள் என இடஒதுக்கீடு முறைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. பெண்களுக்கு 30 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கப்படும். முழு விவரத்தை இந்த செய்தியுடன் இணைக்கப்பட்டுள்ள பிடிஎப் பைலில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

கல்வி தகுதி

கல்வி தகுதி

வயது தகுதி: ஜுலை 1ம் தேதி 2021ன் போது 40 வயதை கடந்திருக்கக்கூடாது. பிசி, எம்பிசி, எஸ்டி, எஸ்சி உள்ளிட்ட பிரிவினருக்கு ஐந்து ஆண்டுகள் வயது தளர்வு உள்ளது. கைவினை பயிற்றுவிப்பாளர் (தையல்) ( Craft Instructor (sewing) ஆசிரியர் பணிக்கு 12ம் வகுப்பு (10+2) படித்திருக்க வேண்டும். அத்துடன் டிப்ளமோ பேசன் டிசைனிங் அல்லது ஆடை வடிமைப்பு படித்திருக்க வேண்டும்.

இசை ஆசிரியர்

இசை ஆசிரியர்

ஓவிய ஆசிரியர் பணிக்கு 12ம் வகுப்பு (10+2) படித்திருக்க வேண்டும். அத்துடன் .டிப்ளமோ பெய்ண்டிங் அல்லது டிப்ளமோ டிராயிங் படித்திருக்க வேண்டும். இசை ஆசிரியர் பணிக்கும் 12ம் வகுப்பு (10+2) படித்திருக்க வேண்டும். அத்துடன் .டிப்ளமோ இசை அல்லது டிகிரி இசை படிப்புகள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழங்களில் இசை தொடர்பான டிப்ளமோ படிப்புகள் படித்திருக்க வேண்டும். உடற்கல்வி ஆசிரியர் பணிக்கு 50 சதவீத மதிப்பெண்களுடன் படித்திருக்க வேண்டும். அல்லது பள்ளி, கல்லூரி அளவில் அல்லது மாவட்ட அல்லது மாநில அளவில் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றிருப்பதுடன், ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் பயின்றிருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம். அனைத்து பணிகளுக்குமான எழுத்து தேர்வு வரும் ஏப்ரல் 28ம் தேதி நடைபெறும். விருப்பம் உள்ளவர் trb.tn.nic.in இல் விண்ணப்பிக்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+