நுகர்பொருள் வாணிப கழகத்தில் பில் கிளர்க் வேலை.. புதுக்கோட்டை இளைஞர்களுக்கு செம சான்ஸ்.. விட்றாதீங்க
சென்னை: புதுக்கோட்டை மாவட்டத்தில் நுகர்பொருள் வாணிப கழகத்தில் பில் கிளர்க் மற்றும் காவலர் பணிக்கு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 8 ஆம் வகுப்பு மற்றும் டிகிரி முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். இந்த பணியிடங்களுக்கு எப்படி விண்ணப்பிப்பது என்பது போன்ற தகவல்களை பார்க்கலாம்.
புதுக்கோட்டை மண்டலத்தில் நெல் கொள்முதல் பணிக்காக தற்காலிக பருவக கால பட்டியல் எழுத்தர் (பில் கிளர்க்) மற்றும் பருவகால காவலர் பணிக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில், பருவகால பட்டியல் எழுத்தர் பணிக்கு ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

பருவ கால காவலர் பணிக்கு ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இந்த பணியிடங்களுக்கான தேர்வு முறை, கல்வி தகுதி உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்:
* பில் கிளர்க் - 30
* பருவகால காவலர் - 80
வயது வரம்பு:
01.07.2025 தேதியிட்டு வயது வரம்பு கணக்கிடப்படும். பொதுப்பிரிவினர் 32 வயது வரை விண்ணப்பிக்கலாம். எஸ்சி/எஸ்டி, எஸ்சிஏ பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 37 ஆகும். எம்பிசி / டிஎன்சிபிசி, பிசிஎம் பிரிவினருக்கு 34 ஆகும்.
சம்பளம் எவ்வளவு?
* பில் கிளர்க் பணிக்கு ரூ.5,285 + ரூ.3,449(அகவிலைப்படி) மற்றும் நாள் ஒன்றுக்கு போக்குவரத்துபடியாக ரூ.120 வழங்கப்படும்.
* காவலர் பணிக்கு ரூ.5,218 + ரூ.3,449 மற்றும் நாள் ஒன்றுக்கு போக்குவரத்துப்படி ரூ.100 வழங்கப்படும்.
கல்வித் தகுதி:
* கல்வித் தகுதியை பொறுத்தவரை பருவகால எழுத்தர் பணிக்கு இளங்கலை அறிவியல் / வேளாண்மை / பொறியியல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
* பருவகால காவலர் பணிக்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
எப்படி விண்ணப்பிப்பது?
விண்ணப்பதாரர்கள் புதுக்கோட்டை மாவட்டத்தை இருப்பிடமாக கொண்டவராக இருக்க வேண்டும். தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் உரிய சான்றுகளுடன்
"மண்டல மேலாளர் , மண்டல அலுவலகம்,
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக கழகம்,
கல்யாணராமபுரம், முதல் வீதி,
திருகோகர்கணம் புதுக்கோட்டை - 622002"
என்ற முகவரியில் அலுவலக வேலை நாட்களில் நேரடியாக விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. விண்ணப்பங்கள் 03.12.2025 மாலை 5 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும். விண்ணப்பங்களை மேற்கண்ட முகவரியில் 24.11.2025 அன்று முதல் அலுவலக வேலை நாட்களில் பெற்றுக்கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications