TNPSC Group 2: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ.. வந்தது அறிவிப்பு.. 821 பணியிடங்கள்.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. குரூப் 2-வில் 41 பணியிடங்களும், குரூப் 2 ஏ-வில் 780 பணியிடங்களும் என மொத்தம் 821 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு இன்று முதல் தொடங்கியுள்ளது. வரும் செப்டம்பர் 9 ஆம் தேதி வரை ஆன்லைன் மூலமாக தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம். குரூப் 2, 2ஏ முதல்நிலைத் தேர்வு வரும் நவம்பர் 1 ஆம் தேதி நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டை விட பணியிடங்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதால் தேர்வர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

தமிழக அரசு பணிகளில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள காலியிடங்களை டிஎன்பிஎஸ்சி நிரப்பி வருகிறது. ஆண்டுதோறும் கால அட்டவணை வெளியிட்டு அதன்படி தேர்வு அறிவிப்பு வெளியிடுவது வழக்கம். அந்த வகையில், குரூப் 2, 2 ஏக்கான அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது.

TNPSC Group 2 2A 821 vacancies - Online applications open today

குரூப் 2, 2 ஏ தேர்வு

குரூப் 2 பிரிவில் 41 பணியிடங்களும், குரூப் 2 ஏ பிரிவில் 780 காலியிடங்களும் என மொத்தம் 821 காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. குரூப் 2 பிரிவில், ஜெயிலர், உதவி செக்‌ஷன் அதிகாரி, சார்-பதிவாளர், துணை வணிகவரி அதிகாரி, தொழிலாளர் நல ஆய்வாளர் உள்ளிட்ட பணியிடங்களும், குரூப் 2 ஏ பிரிவில், உதவியாளர், கணக்காளர், லோயர் டிவிஷன் கிளர்க் உள்ளிட்ட பணிகளும் இதில் இடம் பெற்றுள்ளன.

இன்று முதல் செப்டம்பர் 9 ஆம் தேதி வரை ஆன்லைன் மூலமாக இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். குரூப் 2, 2ஏ முதல்நிலைத் தேர்வு வரும் நவம்பர் 1 ஆம் தேதி நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

கல்வித் தகுதி என்ன?

குரூப் 2, 2 ஏ பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க டிகிரி முடித்து இருப்பது அவசியம் ஆகும். வயது வரம்பை பொறுத்தவவரை குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு பணியிடங்களுக்கு தகுந்தபடி மாறுபடும்.

தேர்வு எப்படி நடைபெறும்?

தேர்வர்கள் ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். குரூப்-2, 2ஏ முதல்நிலை தேர்வு நவம்பர் 1- ந் தேதி காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை நடைபெற உள்ளது. 300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும். ஓஎம்ஆர் வடிவில் விடைகளை குறிக்க வேண்டும். தகுதி பெற 90 மதிப்பெண் எடுக்க வேண்டும். அதில் வெற்றி பெறுபவர்கள் அடுத்த கட்டமாக முதன்மை தேர்வை எதிர்கொள்ள வேண்டும்.

குரூப்-2 பதவிகளுக்கு விரித்துரைக்கும் வகையில் தமிழ் தகுதி தாள் தேர்வு, பாடத் தேர்வு நடக்கும். குரூப்-2 ஏ பதவிகளுக்கு தமிழ் தகுதி தாள் தேர்வு விரித்துரைக்கும் வகையிலும், பாடத் தேர்வு கணினி வழித் தேர்வாக கொள்குறி வகை வினா வடிவமைப்பிலும் நடத்தப்பப்படும். தேர்வுகளை பொறுத்தவரை மாநிலம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெறும். தேர்வர்கள் விண்ணப்பிக்கும் போதே தேர்வு எழுத விரும்பும் மாவட்டங்களை குறிப்பிட வேண்டும்.

கடந்த ஆண்டைவிட குறைவு - தேர்வர்கள் அதிருப்தி

தேர்வர்கள் தேர்வு எழுதும் நாளன்று ஹால் டிக்கெட் மற்றும் அடையாள அட்டையின் நகல் ஒன்றினை தேர்வு மையத்திற்கு கொண்டு வர வேண்டும். தேர்வர்கள் தேர்வு அறைக்கு கருமை நிற மையுடைய பந்து முனை பேனா மட்டுமே பயன்படுத்த வேண்டும். இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

கடந்த ஆண்டு 828 காலிப்பணியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்த நிலையில், நடப்பு ஆண்டு 821 பணியிடங்களாக குறைக்கப்பட்டுள்ளது. இது தேர்வர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு தயாராகி வரும் தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+