டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு.. பிஇ பொறியியல் படித்தவர்களுக்கு இன்ப அதிர்ச்சி.. வேற சான்ஸ் கிடைக்காது

Subscribe to Oneindia Tamil

சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 மற்றும் 2 தேர்வுகள் விரைவில் நடக்க உள்ள நிலையில் அது தொடர்பான முக்கியமான அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஜூலை 13 அன்று குரூப் 1 பதிவுகளுக்கான தேர்வு நடைபெற இருக்கிறது. அதேபோல் குரூப் 2 முதல்நிலைத் தேர்வு செப்டம்பர் மாதம் 14ஆம் தேதிநடக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் கடந்த 08.03.2024 முதல் 30.04.2024 வரையிலான காலத்தில் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு தொகுதி 1இல் அடங்கிய பதவிகளுக்கு 94 நபர்களும், தொகுதி II இல் அடங்கிய பதவிகளுக்கு 47 நபர்களும், ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கு 851 நபர்களும். தொகுதி VA தமிழ்நாடு தலைமைச் செயலகப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கு 165 நபர்களும் மற்றும் பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப மொத்தம் 1163 நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Jobs TNPSC tnpsc group 4 exam 4

டிஎன்பிஎஸ்சி தேர்வு; இதையடுத்து கடந்த வாரம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த ஜூன் 9ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வை நடத்தியது. தமிழகத்தில் பல்வேறு துறைகளில் உள்ள 6624 க்ரூப் 4 காலியிடங்களை நிரப்பவே இந்தத் தேர்வு நடத்தப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் 7,247 தேர்வு மையங்களில் நடந்த 10 ஆம் வகுப்பு கல்வி தகுதி கொண்ட குரூப் 4 தேர்வை 15.8 லட்சம் பேர் எழுதியுள்ளனர் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு அரசுத் துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்கள் இதன் மூலமே நிரப்பப்படும். குரூப் 1, குரூப் 2, 2ஏ, குரூப் 4 என பல்வேறு நிலைகளில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்குத்தான் நேற்று டிஎன்பிஎஸ்சி தேர்வு நடந்தது.

டிஎன்பிஎஸ்சி எனும் தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் ஆண்டுதோறும் பல்வேறு அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் முறையான அறிவிப்புகளுடன் நிரப்பப்பட்டு வருகின்றன. டிஎன்பிஎஸ்சியில் குரூப் 1 முதல் குரூப் 8 வரை பல்வேறு பணிகளுக்கு தேர்வு நடத்தப்படுகிறது.

6,244 காலி பணியிடங்களுக்கான இந்த தேர்வை நேற்று 20 லட்சம் பேர் வரை எழுதினர். இந்த ஆண்டுக்கான குரூப் 4 தேர்வில் கிராம நிர்வாக அலுவலர்- 108, இளநிலை உதவியாளர்-2,604, தட்டச்சர்- 1,705, சுருக்கெழுத்து தட்டச்சர்- 445, தனி உதவியாளர், கிளார்க்- 3 உள்ளிட்ட பல பணிகளுக்கான தேர்வு நடந்தது.

குரூப் 2 தேர்வு: குரூப் 2 தேர்வில் எழுத உள்ளவர்களுக்கு முக்கிய செய்தி ஒன்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி இதிலும் இன்வேலிட் மதிப்பெண் முறை மீண்டும் கடைப்பிடிக்கப்பட உள்ளது. மேலும் பொறியியல் படித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். அதேபோல் மருத்துவம் படித்தவர்களும் இதில் விண்ணப்பிக்கலாம். அது தொடர்பான காலி இடங்கள் அதிகம் உள்ளன.

அதனால் அவர்களுக்கும் விண்ணப்பிக்க இந்த முறை அனுமதி வழங்கப்பட உள்ளது.

குரூப் 1 தேர்வு: இந்த நிலையில் அடுத்த மாதம் நடைபெற உள்ள டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் புதிதாக இன்வேலிட் மதிப்பெண் முறை மீண்டும் கடைப்பிடிக்கப்பட உள்ளது. குரூப் 4 தேர்வில் இந்த புதிய முறை பயன்படுத்தப்பட்ட நிலையில் மீண்டும் குருப் 1 தேர்வில் இதே முறை பயன்படுத்தப்பட உள்ளது.

இந்த முறைப்படி ஒரே கேள்விக்கு தவறான பதிலை முதலில் தேர்வு செய்து பின்னர் ஷெட்டில் அதை அடித்து விட்டு பிறகு வேறு பதிலை தேர்வு செய்ய கூடாது.

அப்படி குறித்தால் அந்த கேள்விக்கான மதிப்பெண் இன்வேலிட் ஆகிவிடும். அதாவது மாற்றி சரியான விடையை கொடுத்தாலும் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஓஎம்ஆர் ஷீட்டில் எது சரியான விடையோ அதை மட்டும் தேர்வு செய்ய வேண்டும். ஜூலை 13 அன்று குரூப் 1 பதிவுகளுக்கான தேர்வு நடைபெற இருக்கிறது. இதிலும் இன்வாலிட்டி மதிப்பெண் முறையை தொடர உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+