குரூப் 2 தேர்வர்களுக்கு வந்த முக்கிய அறிவிப்பு.. ஹால் டிக்கெட் வந்தாச்சு.. எப்படி டவுன்லோடு செய்வது

Subscribe to Oneindia Tamil

சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியிடப்பட்டுள்ளது. வரும் 28 ஆம் தேதி குரூப் 2 தேர்வு நடைபெற உள்ள நிலையில் இன்று ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்விற்கான அறிவிப்பு கடந்த ஜூலை 15-ம் தேதி வெளியானது. மொத்தம் 645 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தமிழக அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பி வருகிறது. குரூப் 1, குரூப் 2, குரூப் 4 என பல தேர்வுகளை நடத்தி தகுயானவர்கள் தேர்வு செய்து காலிப்பணியிடங்களை நிரப்பி வருகிறது.

tnpsc-group-2-hall-ticket-2025-released-download-now-at-tnpsc-gov-in

அந்த வகையில் 645 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக குரூப் 2 தேர்வு அறிவிப்பானது கடந்த ஜூலை மாதம் 15 ஆம் தேதி வெளியானது. குரூப் II பணிகளின் கீழ் 50 காலியிடஙகளும், குரூப் II- A பணிகளின் கீழ் 595 காலியிடங்களும் என மொத்தம் 645 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.

இதற்கு பலரும் விண்ணப்பித்து இருந்த நிலையில் வரும் 28 ஆம் தேதி குரூப் 2 தேர்வு நடைபெற இருக்கிறது. தேர்வர்கள் தேர்வுக்கு தயாராகி வந்த நிலையில் இன்று மாலை குரூப் 2 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டானது வெளியிடப்பட்டுள்ளது. tnpsc.gov.in என்ற ஆன்லைன் இணையதளத்தில் சென்று தங்களது ரெஜிஸ்டர் எண் மற்றும் பாஸ்வேர்டை கொடுத்து ஹால் டிக்கெட்டை டவுன்லோடு செய்துகொள்ளலாம்.

குரூப் II/ II A பணிகளுக்கு பொது முதல்நிலைத் தேர்வு நடத்தப்படும். முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் முதன்மைத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர். இரண்டு பணிகளுக்கும் தனித்தனியாக முதன்மைத் தேர்வு நடத்தப்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+