Group 2: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 ஹால் டிக்கெட் வெளியானது.. டவுன்லோடு செய்வது எப்படி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2 ஏ பணியிடங்களுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ பக்கத்தில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியினை உள்ளீடு செய்து குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தங்கள் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். தேர்வு வரும் நவம்பர் 1 ஆம் தேதி நடக்கிறது.

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2 ஏ பணியிடங்களை நிரப்ப கடந்த மாதம் அறிவிப்பு வெளியிட்டது. குரூப் 2 ஏ பதவி​களில் 780 இடங்​கள் என மொத்​தம் 821 காலி​யிடங்​களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. வரும் நவம்பர் மாதம் 1 ஆம் தேதி குரூப் 2, 2ஏ தேர்வுகள் நடடைபெற உள்ளன.

Group 2 hall ticket released how to download it

பணியிடங்கள் விவரம்:

குரூப் 2, 2ஏ பிரிவில் துணை வணிகவரி அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், சார் பதிவாளர் நிலை II, சிறை அலுவலர்(பெண்கள் தனிச்சிறை), சிறப்பு உதவியாளர், தனிப்பிரிவு உதவியாளர், இளநிலை கண்காணிப்பாளர், முதல்நிலை வருவாய் ஆய்வாளர், உதவியாளர், கணக்கர், பண்டக காப்பாளர், செயல் அலுவர் நிலை II என மொத்தம் 821 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியிருந்தது.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் ஏதாவது ஒரு டிகிரி முடித்து இருக்க வேண்டும். 821 பணியிடங்கள் என்றாலும் இந்த தேர்வுக்கு லட்சக்கணக்கானவர்கள் விண்ணப்பிப்பது வழக்கம். அந்த வகையில், குரூப் 2, 2ஏ அறிவிப்பு வெளியானதும் தேர்வர்கள் ஆர்வத்துடன் விண்ணப்பம் செய்தனர். இந்த நிலையில், விண்ணப்பதாரர்களுக்கு ஹால் டிக்கெட் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

ஹால் டிக்கெட் வெளியீடு

இந்த ஹால் டிக்கெட்டில் தேர்வர்கள் தேர்வு எழுதுவதற்காக அமைக்கப்பட்ட தேர்வு மையத்தின் விவரம் இடம் பெற்று இருக்கும். தமிழகம் முழுதும் அமைக்கப்பட்டுள்ள 38 மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களில் தேர்வர்கள் விருப்பம் தெரிவித்த மாவட்டங்களின் அடிப்படையில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டு இருக்கும். தேர்கள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் ஹால் டிக்கெட்டை டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

டிஎன்பிஎஸ்சியில் தேர்வர்கள் தங்களுக்கு உரிய லாக் இன் பக்கத்துக்கு செல்ல வேண்டும். அங்கு ஒடிஆர் டேஷ்போர்டில் ஏற்கனவே தங்களது விண்ணப்பத்தை பதிவு செய்திருந்த தேர்வர்கள், குரூப் 2 தேர்விற்கான ஹால் டிக்கெட்டை டவுன்லோடு செய்து கொள்ளலாம். இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட கூறியிருப்பதாவது:-

டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

தமிழ்நாடு தேர்வாணையத்தின் அறிவிக்கை எண்: 07/2026, நாள் 11.08.2026 மற்றும் பிற்சேர்க்கை எண் 7A-2026, நாள் 03.09.2026-ன் வாயிலாக நேரடி நியமனத்திற்கு அறிவிக்கை வெளியிடப்பட்ட ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-II (தொகுதி-II மற்றும் IIA பணிகள்) பதவிகளுக்கான முதல்நிலை (கொள்குறி வகை) (ஒளிக்குறி உணரி) தேர்வு 01.11.2026 முற்பகல் நடைபெற உள்ளது.

தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு (Hall Ticket) தேர்வாணையத்தின் இணைய தளம் www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in-ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவு (OTR DASHBOARD) மூலமாக மட்டுமே விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை (Hall Ticket) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்" என்று பதிவிட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+