மொத்த நாடே பார்த்து கத்துக்கணும்.. டிஎன்பிஎஸ்சி எழுதியவர்களுக்கு நம்பிக்கையான நியூஸ்.. இதுதான் தேவை
சென்னை; தமிழ்நாட்டில் நடக்கும் டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் முறைகேடுகள் இல்லாதவையாக இருப்பதை உறுதி செய்வதற்காக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) புதிய முறையை கையாள உள்ளது.
அதன்படி கூடுதல் மின்னணு கண்காணிப்பு வழிமுறைகளை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் பங்கேற்பாளர்களை வீடியோ படம் எடுத்தல், ரகசிய ஆவணங்களை கொண்டு செல்லும் வாகனங்களை ரிமோட் மூலம் லாக் செய்தல், தனிப்பயனாக்கப்பட்ட OMR தாள்கள், வாகனங்களின் ஜிபிஎஸ் கண்காணிப்பு உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட உள்ளன.

அதன்படி கேள்வி மற்றும் பதில் தாள்களை ஏற்றிச் செல்லும் பட்டய வாகனங்களின் இயக்கத்தைக் கண்காணிக்க, வாகனங்களைப் பூட்டுவதற்கும் திறப்பதற்கும் ஜி.பி.எஸ் டிராக்கர்கள் மற்றும் ஜி.பி.எஸ் பூட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதன் பொருள் கேள்வி தாள்கள் அல்லது பதில் தாள்களைக் கொண்டு செல்லும் போது சந்தேகத்திற்கிடமான நடமாட்டம் அல்லது நிறுத்தம் ஏற்பட்டால், ஜி.பி.எஸ். டிஎன்பிஎஸ்சி தலைமையகத்தில் உள்ள கட்டளை அறையிலிருந்து லாக்-இன் சிஸ்டத்தை ரிமோட் மூலம் இயக்கலாம்.
இதன் மூலம் டிஎன்பிஎஸ்சியின் அதிகாரப்பூர்வ ரகசியப் பொருட்களான கேள்வித்தாள், விடைத்தாள்களை மற்றவர்கள் அணுகுவதைத் தடுக்க முடியும்.
எப்படி செயல்படும்: ஜிபிஎஸ் பூட்டுகளை இயக்குவதற்கான ரிமோட் கட்டளை ஆணையத்தின் அலுவலகத்தில் உள்ள கண்காணிப்புக் குழுவால் கையாளப்படுகிறது. மாவட்டங்களில் இருந்து டிஎன்பிஎஸ்சிக்கு ரகசியப் பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்கள் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு பதிவு செய்யப்படுகின்றன. வருவாய்த்துறை ஊழியர்கள், சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் கமிஷன் ஊழியர்கள் அடங்கிய குழுவால் வாகனங்கள் செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதலாக, TNPSC தனிப்பயனாக்கப்பட்ட OMR தாள்களை அறிமுகப்படுத்தி உள்ளது, அதில் வேட்பாளர் பெயர்கள் மற்றும் பதிவு எண்கள் அச்சிடப்பட்டுள்ளன. அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தப் புதிய முறை, விடைத்தாள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கிறது. விடைத்தாள்களை மதிப்பீட்டிற்காக ஸ்கேன் செய்யும் போது, விண்ணப்பதாரர்களின் ரோல் எண்ணுடன் மதிப்பெண்கள் தானாகவே பதிவு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் : தமிழ்நாட்டில் அடுத்த 2 வருடங்களில் நிரப்பப்படும் அரசு வேலைகள் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.
அதன்படி தமிழ்நாட்டில் டிஎன்பிஎஸ்சி உட்பட பல்வேறு தேர்வுகள் மூலம் 70 ஆயிரம் கூடுதல் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இது போக மற்ற தேர்வுகள் மூலம் 50 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப உள்ளன. 2026 ஜனவரிக்குள் இந்த பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளன.
குரூப் தேர்வு மட்டுமின்றி பல தேர்வுகள் மூலம் நிறைய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தமிழ்நாட்டில் அடுத்தடுத்து குரூப் தேர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அடுத்த சில வாரங்களில் நடக்கும் குரூப் தேர்வுகள் மூலம் மேற்கண்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
அதன்படி குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ தேர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுகள் நிலையில் முக்கியமான சில விதிகள் மாற்றப்பட்டு உள்ளன. குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ முதல்நிலைத் தேர்வு செப்டம்பர் மாதம் 14ஆம் தேதிநடக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் முக்கியமான சில விதிகள் மாற்றப்பட்டு உள்ளன.
இந்த தேர்வுக்கு ஜூலை 19ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 19ம் தேதி கட்டணம் செலுத்த கடைசி நாள் ஆகும். 2327 காலிப்பணியிடங்களுக்கு இந்த தேர்வு நடக்கிறது.
மற்ற தேர்வுகள்: கடந்த வாரம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த ஜூன் 9ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வை நடத்தியது. தமிழகத்தில் பல்வேறு துறைகளில் உள்ள 6624 க்ரூப் 4 காலியிடங்களை நிரப்பவே இந்தத் தேர்வு நடத்தப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் 7,247 தேர்வு மையங்களில் நடந்த 10 ஆம் வகுப்பு கல்வி தகுதி கொண்ட குரூப் 4 தேர்வை 15.8 லட்சம் பேர் எழுதியுள்ளனர் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு அரசுத் துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்கள் இதன் மூலமே நிரப்பப்படும். குரூப் 1, குரூப் 2, 2ஏ, குரூப் 4 என பல்வேறு நிலைகளில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்குத்தான் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு நடந்தது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications