TNPSC: டிஎன்பிஎஸ்சி குரூப் 4.. கலந்தாய்வு போகும் தேர்வர்கள் கவனத்திற்கு! இதை தெரிஞ்சுக்காம போகாதீங்க!
சென்னை: குரூப் 4 கலந்தாய்வு வரும் 8 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரையிலும் 22 ஆம் தேதியில் இருந்து 31 ஆம் தேதி வரையிலும் என இரண்டு கட்டமாக நடைபெற உள்ளது. கலந்தாய்விற்கு தேர்வர்களும் அழைக்கப்பட்ட அனைத்து தேர்வர்களும் தேர்வு செய்யப்படுவார்கள் என்று உறுதி அளிக்க இயலாது என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
குரூப் 4 தேர்வு எழுதியவர்களுக்கு கலந்தாய்வு தேதி நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இளநிலை உதவியாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பணிக்கு 08.12.2025 முதல் 18.12.2025 வரை கலந்தாய்வு நடைபெற உள்ளது. தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்தர் பணிக்கு 22.12.2025 முதல் 31.12.2025 வரை கலந்தாய்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலந்தாய்வுக்கு வரும் தேர்வர்களின் சந்தேகங்களை தீர்க்கும் வகையில் முக்கிய அப்டேட்கள் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டு வருகிறது. அதன் விவரம் வருமாறு:

டிஎன்பிஎஸ்சி குரூப் 4
* கலந்தாய்விற்கு அழைக்கப்பட்ட தேர்வர்களும் தெரிவு செய்யப்படுவார்களா?
இளநிலை உதவியாளர், கிராம நிர்வாக அலுவலர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிகளுக்குரிய (வனக்காப்பாளர், ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர், வனக்காவலர், வனக்காவலர் பழங்குடியினர் இளைஞர் நீடலாக) 5036 காலிப்பணியிடங்களை நிரப்ப, 85,70 தேர்வர்கள் கலந்தாய்விற்கு அழைக்கப்பட்டுள்ளனர். எனவே கலந்தாய்விற்கு அழைக்கப்பட்ட அனைத்து தேர்வகளும் தெரிவு செய்யப்படுவார்கள் என்பதற்கான உறுதி அளிக்க இயலாது.
இணையவழியில் விண்ணப்பித்த பின்
* இணையவழியில் விண்ணப்பிக்கும் போது அரசுப்பணியில் இருந்த தேர்வர்கள் மற்றும் இணையவழியில் விண்ணப்பித்த பின் அரசுப்பணியில் சேர்ந்த தேர்வர்கள் மூலச் சான்றிதழ் சரிபார்ப்பின் போது தடையின்மை சான்றிதழை சமர்ப்பிக்கவில்லையெனில் அவர்கள் கலந்தாய்விற்கு அனுமதிக்கப்படுவார்களா?
இணையவழியில் விண்ணப்பிக்கும் போது அரசுப்பணியில் இருந்த தேர்வர்கள் மற்றும் இணையவழியில் விண்ணப்பித்த பின் அரசுப்பணியில் சேர்ந்த தேர்வர்கள் மூலச் சான்றிதழ் சரிபார்ப்பின் போது தடையின்மை சான்றிதழை சமர்ப்பிக்கவில்லையெனில் அவர்களது விண்ணப்பம் நிராகரிக்கப்படுவதுடன் அவர்கள் கலந்தாய்விற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள்.
* ஒன்றுக்கு மேற்பட்ட பதவிகளுக்கு கலந்தாய்விற்கு அனுமதிக்கப்பட்ட தேர்வர், ஒரு பதவியை தேர்ந்தெடுத்த பின்னர் மற்ற பதவிகளுக்கான அனுமதிக்கப்படுவாரா?
கலந்தாய்விற்கு ஒன்றுக்கு மேற்பட்ட பதவிகளுக்கு கலந்தாய்விற்கு அனுமதிக்கப்பட்ட தேர்வர், ஒரு பதவியை தேர்ந்தெடுத்த பின்னர் மற்ற பதவிகளுக்கான கலந்தாய்விற்கு அனுமதிக்கப்படமாட்டார்.
தட்டச்சர் பதவிக்கான கலந்தாய்வு
* இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர் பதவிகளுக்கான கலந்தாய்வுகளுக்கு அனுமதிக்கப்பட்ட தேர்வர்கள், இளநிலை உதவியாளர் பதவிக்கு விருப்பமில்லையெனில், இளநிலை உதவியாளர் பதவிக்கான கலந்தாய்வில் கலந்துகொள்ள வேண்டுமா?
இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர் பதவிகளுக்கான அனுமதிக்கப்பட்ட தேர்வர்கள், கலந்தாய்வுகளுக்கு இளநிலை உதவியாளர் பதவிக்கு விருப்பமில்லையெனில், இளநிலை உதவியாளர் பதவிக்கான கலந்தாய்வில் கலந்து கொள்ளவில்லை என்றாலும் அந்த தேர்வர் தட்டச்சர் பதவிக்கான கலந்தாய்விற்கு அனுமதிக்கப்படுவார்.
தடையின்மை சான்றிதழ்
* இணையவழியில் அரசுப்பணியில் விண்ணப்பிக்கும் போது இருந்த தேர்வர்கள் மற்றும் இணையவழியில் விண்ணப்பித்த பின் அரசுப்பணியில் சேர்ந்த தேர்வர்கள் மூலச் சான்றிதழ் சரிபார்ப்பின் போது தடையின்மை சான்றிதழை சமர்ப்பிக்கவில்லையெனில் அவர்கள் கலந்தாய்விற்கு அனுமதிக்கப்படுவார்களா?
இணையவழியில் அரசுப்பணியில் விண்ணப்பிக்கும் போது இருந்த தேர்வர்கள் மற்றும் இணையவழியில் விண்ணப்பித்த பின் அரசுப்பணியில் சேர்ந்த தேர்வர்கள் மூலச் சான்றிதழ் சரிபார்ப்பின் போது தடையின்மை சான்றிதழை சமர்ப்பிக்கவில்லையெனில் அவர்களது விண்ணப்பம் நிராகரிக்கப்படுவதுடன், அவர்கள் கலந்தாய்விற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள்.
-
HCL IT JOBS: நாளை சென்னையில் இண்டர்வியூ.. அழைக்கும் எச்சிஎல்.. சூப்பர் சான்ஸ் -
கடலூரில் அரசு வேலைக்கு ஆசைப்பட்ட பெண்.. மறக்க முடியாத "ரூ.5 லட்சம்" பரிசு தந்த மாஸ்டர் மைண்ட் தோழன் -
"அப்படியே ஓடிடுங்க.." தங்கம் அவுட், கேஷ் இன்.! ஆனந்த் சீனிவாசன் சொன்ன மேட்டர் இதுதான் -
ஈரானை தாக்க.. இந்திய துறைமுகத்தை பயன்படுத்தியதா அமெரிக்கா? மத்திய அரசு மறுப்பு -
ஒவ்வொன்றும் ஒரு வெடி குண்டுக்கு சமம்.. சங்கீதா கையில் அந்த வீடியோ ஆதாரம்.. வசமாக சிக்கும் விஜய்! -
2025க்கு முன் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கும் ஜாக்பாட் வருமா? பென்சன் வழக்கில் ஐகோர்ட் நோட்டீஸ் -
Vijay: வதந்திகளுக்கு பதிலடி! ஷாலினியுடன் சங்கீதா.. அஜித் வீட்டில் விஜய்! லீக்கான வீடியோ -
பல்லாவரம் ஜிஎஸ்டி சாலை ஸ்தம்பித்தது.. என்ன காரணம்.. தாம்பரம் போலீசாருக்கு பறந்த கோரிக்கை -
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ராஜினாமா! சிறுவயது ஆசைக்காக ராஜ்யசபா எம்பியாகிறார்.. அவரே தந்த விளக்கம் -
விஜய்கிட்ட ஒன்னுமேயில்லை..இன்னும் 10 வருஷம் போகட்டும்! அடம் பிடித்த ராகுலை கார்கே சமாளித்தது எப்படி? -
Vijay Trisha: ஜோடியாக வந்த விஜய் திரிஷா.. சென்னையில் நடந்த திருமண நிகழ்ச்சி.. ஒரே காரில் வந்து பங்கேற்பு -
சங்கீதா விஷயத்தை விட பெரிய சிக்கல்.. அவ்வளவு தூரம் வாக்குறுதி கொடுத்தீர்களே.. புலம்பி கொட்டிய விஜய்












Click it and Unblock the Notifications