தமிழக காவல்துறையில் பணியாற்ற விருப்பமா.. நீங்கள் பட்டதாரியா.. அருமையான வாய்ப்பு
சென்னை: தமிழ்நாடு சிறைதுறையில் காலியாக உள்ள 59 உதவி சிறை அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க பட்டப்படிப்பு தான் தகுதியாக பார்க்கப்படுகிறது. விண்ணப்பம் மற்றும் கடைசி தேதி உள்ளிட்ட விவரங்களை பார்ப்போம்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) சிறை பணிகளில் அடங்கிய ஆண் மற்றும் பெண் சிறைக் காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் மொத்தம் 54 ஆண்கள், 5 பெண்கள் உதவி ஜெயிலர் பணியிடங்கள் நிரப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 11.05.2023 க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 35,400 - 1,30,400 (
வயதுத் தகுதி: இந்தப் பணியிடங்களுக்கு 1.07.2023 அன்று 32 வயதிற்குள் இருக்க வேண்டும். SC, SC(A), ST, MBC, BC, BCM பிரிவினருக்கு வயது வரம்பு இல்லை.
தேர்வு முறை: துணை ஜெயிலர் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
தேர்வு நடைபெறும் நாள்: எழுத்துத் தேர்வு இரண்டு தாள்களாக வரும் ஜூலை 1ம் தேதி (2023) நடைபெறும்.
இதில் முதல் தாளில் Constitution and Human Rights, Administration of Union and States with special reference to Tamil Nadu, Socio-Economic issues in India / Tamil Nadu, Current issues at National Level, Current issues at State Level ஆகிய பாடங்களில் இருந்து வினாக்கள் இடம்பெறும். இதில் 100 வினாக்கள் 150 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும். இதற்கான கால அளவு 3 மணி நேரம்.
இரண்டாம் தாள் இரண்டு பகுதிளாக நடைபெறும். முதல் பகுதி பொதுத் தமிழ். இதில் 100 வினாக்கள் 150 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும். குறைந்தபட்சம் எடுக்க வேண்டிய மதிப்பெண்கள் 60. இதற்கான கால அளவு 3 மணி நேரம்.

இரண்டாம் தாள் பொது அறிவு. இதில் 100 வினாக்கள் 150 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும். இதற்கான கால அளவு 3 மணி நேரம்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ. 150, இருப்பினும் ஏற்கனவே நிரந்தர பதிவு வைத்திருப்பவர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.
தேர்வுக் கட்டணம் : ரூ. 200, இருப்பினும் SC, SC(A), ST மற்றும் விதவைகள் உள்ளிட்ட பிரிவுகளுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு உண்டு.
உயரம் எவ்வளவு: ஆண்கள் 168 செமீ இருக்க வேண்டும், பெண்கள் 159 செமீ உயரம் இருக்க வேண்டும். ஆண்கள் எஸ்சி எஸ்டி பிரிவினர் 160 செமீ இருந்தால் போதும். பெண்கள் எஸ்சி எஸ்டி பிரிவினர் 157 செமீ இருந்தாலும் விண்ணப்பிக்கலாம். நீங்கள் விண்ணப்பிக்கும் போது என்ன உயரம், மார்பளவு எவ்வளவு (ஆண்கள் மட்டும் ) விரிந்த நிலையில் எவ்வளவு என்பதை தெரிவிக்க வேண்டும்.
கண் பார்வை இரண்டு கண்களுமே 6/6 என்கிற அளவில் தெளிவாக இருக்க வேண்டும். கண்பார்வை சோதனை கண்டிப்பாக நடத்தப்படும்.
விண்ணப்பம் செய்வது எப்படி?
விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.in என்ற இணையதள பக்கத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே நிரந்தர பதிவு வைத்திருப்பவர்கள் அதன் மூலம் விண்ணப்பிக்கலாம். நிரந்தரப்பதிவு வைத்திருப்பவர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்பவர்கள் தங்களது புகைப்படம் மற்றும் கையொப்பம் ஆகியவற்றை ஆணையம் அறிவித்துள்ள அளவு மற்றும் பார்மட்டில் வைத்துக் கொள்ளுங்கள். மேலும், தங்களது கல்வி மற்றும் பிறச் சான்றிதழ்களை கையில் வைத்துக் கொண்டு விண்ணப்பிக்க வேண்டும். உங்களது அனைத்து விவரங்களையும், சரியாக உள்ளிட்டு விண்ணப்பக் கட்டணத்தையும் செலுத்தி, சமர்ப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் : 11.05.2023












Click it and Unblock the Notifications