TNPSC: டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு.. 170 காலியிடங்கள்! தேர்வர்களே விண்ணப்பிக்க ரெடியா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: டிஎன்பிஎஸ்சி வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. கால்நடை உதவி மருத்துவர், முதுநிலை பூச்சியியல் வல்லுநர் உள்ளிட்ட 31 பதவிகளுக்கான 170 காலிப்பணியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பி.இ, பிடெக் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இது குறித்த விவரங்களை இங்கு காணலாம்.

தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி நிரப்பி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட இருக்கும் தேர்வுகள் குறித்த தேர்வு கால அட்டவணையை முந்தைய ஆண்டே வெளியிட்டு அதன்படி தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது. கடந்த மாதம் குரூப் 2, 2 ஏ-க்கான தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில், நடப்பு மாதம் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

job TNPSC Group 4 4

டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

இதற்கிடையே, டிஎன்பிஎஸ்சி நேற்று டெக்னிக்கல் சர்வீஸ் (TNPSC CTSE - Interview Posts) பணிக்கான தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 170 காலியிடங்களுக்காக இந்த அறிவிப்பு வெளியானது. இது குறித்து டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பில் கூறியதாவது:-

ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு (நேர்முகத் தேர்வு பதவிகள்) 2026. கால்நடை உதவி மருத்துவர், முதுநிலை பூச்சியியல் வல்லுநர் உள்ளிட்ட 31 பதவிகளுக்கான 170 காலிப்பணியிடங்களை நிரப்ப, ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு (நேர்முகத் தேர்வு பதவிகள்)-க்கான அறிவிக்கை, தேர்வாணையத்தின் ஆண்டுத்திட்டத்தில் குறிப்பிட்டுள்ளபடி இன்று (31.08.2026) வெளியிடப்பட்டுள்ளது.

தேர்வர்கள் 07.09.2026 முதல் 06.10.2026 வரை இணையவழியில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். தேர்வர்கள் தேர்வுக்கட்டணத்தை UPI மூலமாகவும் செலுத்தலாம். கணினி வழித் தேர்வு நடைபெறும் நாள் மற்றும் நேரம் தேர்வாணைய இணையதளத்தில் பின்னர் அறிவிக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டது.

கல்வித் தகுதி என்ன?

பணியிடங்களுக்கு தகுந்தபடி கல்வித் தகுதி மாறுபடும். பிஇ, பிடெக், பிவிஎஸ்ஸி ஏஹெச், எம்பிஏ, எம்சிஏ, சிஏ, ஐசிடபிள்யூஏ, ஏசிஎஸ், எம்வி எஸ்சி உள்ளிட்ட படிப்புகள் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு முறை:

எழுத்து தேர்வு, (பேப்பர் 1 &2) சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்ப கட்டணம்:

விண்ணப்ப கட்டணமாக ரூ.200 செலுத்த வேண்டும். ஒருமுறை பதிவு செய்யாதவர்கள், அதற்கு தனியாக ரூ.150 செலுத்த வேண்டும். கட்டண சலுகையும் உண்டு. இது பற்றிய முழு விவரங்களை கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் தேர்வு அறிவிப்பில் தேர்வர்கள் தெரிந்து கொள்ளலாம். இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வரும் 6.10.2026 அன்று கடைசி நாளாகும்.

தேர்வு அறிவிப்பை படிக்க: https://tnpsc.gov.in/Home.aspx

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+