TNPSC Job Alert: நல்ல சம்பளத்தில் டிஎன்பிஎஸ்சி சூப்பர் வேலை.. வாய்ப்பை தவறவிடாதீர்கள்
சென்னை: டிஎன்பிஎஸ்சி-இல் தற்போது தமிழ்நாடு நகர மற்றும் நாட்டின் திட்டமிடல் துணை சேவை பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் ஆண்டுதோறும் 30க்கும் மேற்பட்ட போட்டி தேர்வுகளை நடத்தி வருகிறது. க்ரூப் தேர்வுகளைத் தாண்டி, குறிப்பிட்ட பாடப் பிரிவுகளுக்கும் தனித்தனியாகத் தேர்வுகள் நடத்தப்படுகிறது.

இந்நிலையில் தமிழ்நாடு நகர மற்றும் நாட்டின் திட்டமிடல் பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மொத்த காலியிடங்கள் - 4
பணி - கட்டிக்கலை உதவியாளர், திட்டமிடல் உதவியாளர் ( Architectural Assistant / Planning Assistant)
கல்வித் தகுதி: நகரத் திட்டமிடல் அல்லது அதற்கு இணையான பாடங்களில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்
அல்லது
Institute of Town Planners of India உறுப்பினராக இருக்க வேண்டும்.
அல்லது
சிவில் பிரிவில் பிஇ பட்டம் பெற்றிருக்க வேண்டும்
அல்லது
கட்டிடக்கலையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
மாத சம்பவம் - ரூ 37,700 ஆயிரம் முதல் ரூ 1.19 லட்சம் வரை
வயது வரம்பு: 34 வயது வரை
தமிழக அரசின் விதிகளின்படி எஸ்சி, எஸ்டி. எம்பிசி, ஒபிசி உள்ளிட்ட சில பிரிவினருக்கு வயது வரம்பு இல்லை.
தேர்வு செய்யும் முறை - 2 வகையான தேர்வுகள் (முதன்மை எழுத்துத் தேர்வு + நேர்முகத் தேர்வு)
விண்ணப்பக் கட்டணம் - 150 ரூபாய்
தமிழ்நாடு அரசின் விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்குத் தேர்வு கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது
விண்ணப்பிக்கும் முறை - http://www.tnpsc.gov.in/ அல்லது http://www.tnpscexams.in/ தளங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம்
விண்ணப்பிக்கக் கடைசி தேதி - அக்டோபர் 23, 2021
இது குறித்துக் கூடுதல் விவரங்களை
https://www.tnpsc.gov.in/Document/english/13_2021_Architectural_Planning_Asst_2021_english.pdf
விண்ணப்பிக்க












Click it and Unblock the Notifications