இந்து சமய அறநிலைய பணி.. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட செம அறிவிப்பு.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்
சென்னை: இந்து சமய அறநிலையத்துறையில் காலியாக உள்ள உதவி ஆணையர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? வயது வரம்பு எவ்வளவு? கல்வித்தகுதி என்ன? போன்றவற்றை இங்கு பார்க்கலாம்.
தமிழக அரசில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் எனப்படும் டிஎன்பிஎஸ்சி நிரப்பி வருகிறது. அந்த வகையில், தற்போது இந்து சமய அறநிலையத்துறையில் காலியாக உள்ள உதவி ஆணையர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.. கல்வி தகுதி என்ன? வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை இங்கே பார்க்கலாம்

பணியிடங்கள் விவரம்:
* உதவி ஆணையர் (இந்து சமய அறநிலைய (ஆட்சி) பணி - 21 பணியிடங்கள்
* மாவட்ட கல்வி அலுவலர் - 08 பணியிடங்கள்
என மொத்தம் 29 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கல்வி தகுதி: அரசு அங்கீகரித்த கல்வி நிறுவனங்களில் இருந்து ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்து இருக்க வேண்டும். நீதிமன்றங்களில் மூன்று ஆண்டுகளாவது பயிற்சி வழக்குரைஞராக (pleader) பயிற்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையில் செயல் அலுவலர், மேலாளர், எழுத்தர் உள்ளிட்ட பணிகளில் குறைந்தது ஆறு ஆண்டுகளாவது பணியாற்றியிருக்க வேண்டும்.
மாவட்ட கல்வி அலுவலர் பணிக்கு கணிதவியல், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், பொருளியல், புவியியல், வரலாறு வணிகவியல் தமிழ் மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் முதுகலை பட்டம் பெற்று இருக்க வேண்டும். மற்றும் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் இளங்கலை கற்பித்தல் அல்லது இளங்கலை கல்வியியல் (B.ED) பட்டம் அல்லது அந்த பட்டப்பிடிப்பிற்கு இணையானதை முடித்து இருக்க வேண்டும். கல்வி தகுதி குறித்த முழுமையான விவரங்களை தேர்வு அறிவிப்பில் விண்ணப்பதாரர்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.
வயது வரம்பு:
உதவி ஆணையர் - அதிகபட்ச வயது வரம்பு: 34
மாவட்ட கல்வி அதிகாரி: 32 (பொது போட்டி தேர்வர்களுக்கு)
பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு - 42
விண்ணப்பிப்பது எப்படி?:
தேவையான கல்வி தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் சென்று அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை கொடுக்க வேண்டும். தேர்வுக்கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். முதன்மை தேர்வு எழுதும் முன்பாக ரூ.200 செலுத்த வேண்டும். அரசு விதிகளின் படி தேர்வுக்கட்டணம் செலுத்துவதில் இருந்து சலுகை கோருபவர்களுக்கு விலக்கு உண்டு.
தேர்வு முறை: முதல் நிலைத்தேர்வு, முதன்மை தேர்வு அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு நடைபெறும். முதல் நிலைத்தேர்வு 12.07.2024 அன்று நடைபெறும். தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் 22.05.2024 கடைசி நாள் ஆகும். தேர்வு அறிவிப்பினை படிக்க https://www.tnpsc.gov.in/Document/tamil/05_2024_TAM_.pdf இந்த லிங்கை கிளிக் செய்யவும்.












Click it and Unblock the Notifications