Group 2 Exam: டின்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு ரிசல்ட் வந்தாச்சு! உங்க நம்பர் இருக்கா பாருங்க? உடனே செக் பண்ணுங்க
சென்னை: குரூப் 2 முதல்நிலை தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. குரூப் 2 தேர்வில் 1,126 பேர் தேர்ச்சி பெற்ற நிலையில் குரூப் 2 ஏ தேர்வில் 9,457 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 828 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 2 முதல்நிலை தேர்வு கடந்த செப்டம்பர் 28 ஆம் தேதி நடைபெற்றது.
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு II (தொகுதி II & IIA பணிகள்) முதன்மைத் தேர்வுக்கான பட்டியல்கள் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-II (தொகுதி II & IIA பணிகள்) உள்ளடக்கிய பதவிகளின் நேரடி நியமனத்திற்காக 15.07.2025 அன்று அறிவிக்கை வெளியிட்டது. இத்தெரிவிற்கான முதல்நிலைத் தேர்வு 28.09.2025 மு.ப. நடைபெற்றது. இத்தேர்விற்கு 5,53,634 தேர்வர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். மேற்படி தேர்வினை 4,20,217 தேர்வர்கள் எழுதினர்.
இத்தெரிவிற்கான தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதம் 2025-இல் வெளியிடப்படும் என தேர்வாணைய வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டது. அவ்வாறே, மேற்கண்ட அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விதிகளின்படி, தொகுதி II மற்றும் IIA பணிகளுக்கான முதன்மை தேர்வுக்கு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட தேர்வர்களின் பதிவெண் கொண்ட பட்டியல்கள் தேர்வாணைய (www.tnpsc.gov.in) 22.12.2025 அன்று வெளியிடப்பட்டுள்ளன.
தொகுதி IIA பணிகளில் உள்ளடக்கிய பதவிகளுக்கான முதன்மைத் தேர்வு (கொள்குறி வகை), தாள்-II (பொது அறிவு, பொது நுண்ணறிவு மற்றும் பகுத்தறிவு) கணினி வழித் தேர்வாக நடத்தப்படும் என அறிவிக்கையில் (Notification) தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், நிர்வாகக் காரணங்களுக்காக தொகுதி IIA பணிகளின் தாள்-II -ற்கான முதன்மைத் தேர்வு OMR முறையில் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
தேர்வர்கள், தேர்வாணைய வலைதளத்தினை (www.tnpsc.gov.in) தொடர்ந்து பார்வையிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். என்று கூறபப்ட்டுள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications