3 மாதங்களில் டிஎன்பிஎஸ்சி மூலம் இத்தனை பேருக்கு வேலைவாய்ப்பா? சபாஷ் தமிழக அரசு! இளைஞர்கள் ஹேப்பி

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த 3 மாதங்களில் வெவ்வேறு துறைகளுக்கு எவ்வளவு பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பது குறித்து விவரங்களை டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அலுவலக உதவியாளர் முதல் உயர் பதவி வரை இந்த டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் எஸ்.கோபால சுந்தரராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கடந்த மே 1 முதல் ஜூலை 31 வரையிலான (3 மாதங்கள்) டிஎன்பிஎஸ்சி மூலம் குருப்-2-ஏதேர்வு வாயிலாக 5,413 பேரும்வேளாண் விரிவாக்க அலுவலர்பதவிக்கு 51 பேரும் தோட்டக்கலை அலுவலர் பதவிக்கு 85 பேரும் உதவி வனப்பாதுகாவலர் பதவிக்கு 9 பேரும் ஒருங்கிணைந்த கணக்கு பணிகள் அடங்கிய பதவிகளுக்கு 43 பேரும் உதவி வேளாண் அலுவலர் பதவிக்கு 82 பேரும் உதவி தோட்டக்கலை அலுவலர் பதவிக்கு 157 பேரும் பணி மேற்பார்வையாளர் மற்றும் இளநிலை வரைதொழில் அலுவலர் பதவிக்கு 91 பேரும் என மொத்தம் 6,032 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

tnpsc jobs job

அது போல் நிதித் துறை கட்டுப்பாட்டில் உள்ள தணிக்கைத் துறைகளுக்கு டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்யப்பட்ட 780 பேருக்கு முதல்வர் ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: நிதித்துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் கூட்டுறவு தணிக்கைத்துறையில் 7 கூட்டுறவு தணிக்கை உதவி இயக்குநர் பணியிடங்களும், 928 இளநிலை கூட்டுறவு தணிக்கையாளர் பணியிடங்களில் முதற்கட்டமாக 700 இளநிலை கூட்டுறவு தணிக்கையாளர் பணியிடங்களும், உள்ளாட்சி நிதித் தணிக்கைத் துறையில் 43 உதவி ஆய்வாளர்கள் பணியிடங்களும் மற்றும் இந்து சமய அறநிலைய நிறுவனங்களின் தணிக்கைத் துறையில் 30 உதவி தணிக்கை ஆய்வாளர் பணியிடங்களும், என மொத்தம் 780 பணியிடங்களுக்குத் தகுதியானவர்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் அடையாளமாக 20 பேருக்கு தலைமைச் செயலகத்தில் பணி நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இளநிலை கூட்டுறவுத் தணிக்கையாளரின் முக்கிய பணி, தொடக்க வேளாண்மை கூட்டுறவுச்சங்கம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி உள்ளிட்ட அனைத்து கூட்டுறவுச் சங்கங்களின் செயல்பாடுகளை தணிக்கை செய்தல், வரவினமாக உள்ள கடன், அசல், வட்டி போன்ற இனங்கள் உரிய முறையில் வரவு வைக்கப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்வதாகும்.

அதேபோல், இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அறநிலைய நிறுவனங்களின் பொது கணக்கு, அன்னதானக் கணக்கு, திருப்பணி மற்றும் இதர வரவு-செலவு கணக்குகள் மீது தணிக்கை மேற்கொண்டு இந்து சமய அறநிலைய சட்ட விதிகளுக்கு உட்பட்டு வரவு-செலவுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை உறுதி செய்வது, அறநிலையத் துறையின் தணிக்கை ஆய்வாளர் பணியாகும்.

மேலும், உள்ளாட்சி நிதி தணிக்கைத் துறையின் உதவி ஆய்வாளர்கள், உள்ளாட்சி நிறுவனங்களின் கணக்குகளைச் சரிபார்த்தல், வரவு செலவுகள் முறையாக உள்ளனவா என்பதையும் சரிபார்க்க வேண்டும்.

மேலும், வரவு செலவுகள் சம்பந்தப்பட்ட சட்டத்துக்கு உட்பட்டுமேற்கொள்ளப்பட்டு வருகின்றனவா என்பதையும் உறுதி செய்வதுடன், அரசு மற்றும் பிற நிதி உதவி அளிக்கும் நிறுவனங்கள் வழங்கும் நிதி வழங்கப்பட்ட காரணங்களுக்காக முறையாக பயன்படுத்தப்படுகிறதா என்பதை ஆய்வுசெய்வதுமாகும்.

நிகழ்ச்சியில், அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, நிதித்துறைச் செயலர் த.உதயச்சந்திரன், நிதித்துறைச் செயலர் (செலவினம்) எஸ். நாகராஜன், தலைமை தணிக்கைஇயக்குநர் ஜி.கே.அருண் சுந்தர்தயாளன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+